419

5. முல்லை

(42) கிழவன் பருவம்பாராட்டுப் பத்து


419, உயிர்கலந் தொன்றிய செயிர்தீர் கேண்மைப்
   1பிரிந்துற லறியா விருந்து கவவி
   நம்போ னயவரப் புணர்ந்தன
   கண்டிகு மடவரல் புலவின் மாவே.

     எ-து இன்ப நுகாச்சிக்கேற்ற பருவம் வந்துழித் தலைமகளொடு
புறவிற் சென்ற தலைமகன் அவ்விடத்து மாக்களை அவட்குக்காட்டிச்
சொல்லியது.

    குறிப்பு. செயிர்தீர் கேண்மை-குற்றமற்ற நட்பு; உயிர்கலந்
தொன்றிய கேண்மை; நற். 72 : 3, பிரிந்துறலை அறியாதபடி
இருந்து. கவவி-அணைத்து. விருந்து கவவியெனப் பிரித்தலும்.
பொருந்தும் நயவர-விருப்பம் வர. கண்டிகும்-காண்போம். மட
வரல் : விளி மா கவவிப் புணர்ந்தன கண்டிகும்.

    (பி-ம்.) 1 ‘பிரிந்துறு வறியா? ( 9 )