42

(5) புலவிப் பத்து


42. மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ
   யாண ரூரநின் மாணிழை யரிவை
   காவிரி மலிர்நிறை யன்னநின்
   மார்புநனி 1விலக்க றொடங்கி யோளே.

 எ-து தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை தலைவன் பிற பரத்
தையருடன் ஒழுகினானென்று புலந்தாளாக, அதனையறிந்த தலைவி
அவன் 2தன்னில்லத்துப் புகுந்துழித் தானறிந்தமை தோன்றச்
சொல்லியது.

  குறிப்பு. மகிழ் மிக-மதுமயக்கம் மிக. யாணர்-புதுவருவாய்.
மாணிழையரிவை என்றது பரத்தையை. காவிரி மலிர்நிறை யன்ன
-காவிரியாற்றின் வெள்ளம் போன்ற: அகநா. 166:14-5, 341:4;
?செங்குணக் கொழுகுங் கலுழி மலிர்நிறை, காவிரி? (பதிற். 50:5-6).
நின் அரிவை நின் மார்பை விலக்கல் தொடங்கியோள், ஆகையால்
மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ; தொடங்கியோள்-
தொடங்கினாள். கொழுநன் மார்பைக் காத்தல்: குறுந். 80:7.

 (மேற்.) மு. இச்செய்யுள் தோழி தலைவியை உயர்த்துக் கூறி
யது. ‘இதனுள் காவிரிப் பெருக்குப்போலத் தலைவியை நோக்கி
வருகின்றமார்பினைத் தான் விலக்குமாறு என்னையெனத் தலைவியை
உயர்த்துக் கூறியவாறு காண்க? (தொல். பொருள். 46.ந.)

 (பி-ம்) 1 ‘விலங்க? 2 ‘தன்னில்லகத்து?                                      ( 2 )