எ-து ‘பிரியுங்கொல்? என்று ஐயுற்ற தலைமகள் ஐயம் தீரத் தலை
மகன் சொல்லியது.
குறிப்பு. திருவில்-இந்திரவில்; புறநா. 20 : 10; சிலப். 15 : 156.
மணி. 6 : 10; சீவக. 1903; சூளா. நகரச் 18. கோலி-வளைத்து.
ஆர்கலி எழிலி-ஒலியையுடைய மேகம். சோர்-மழை சோர்தலை.
விழுத்தொழில்-விழுமிய தொழில். நிற் புறந்தர-உன்னைப்
பாதுகாக்க. புறந்தரத் தொடங்கினன்.
(மேற்.) மு. இஃது ஐயந்தீர்த்தது (தொல். கற்பு. 5, ந.)
(பி-ம்.) 1 ‘கார் தொடங்கின்றே? 2 ‘புறந்தரலே? ( 8 )