எ-து வேந்தற்கு உற்றுழிப்பிரிந்த தலைமகன் வினைமுடியாமை
யிற் பாசறைக்கண் இருந்து பருவவரவிண்கண் சொல்லியது.
குறிப்பு. அருந்தொழில் தணியின்-அருமையான தொழில்
முடிவுறின். விசும்பு-ஆகாயம். இருண்டு தோன்றும் விசும்பு என்றது.
கார்காலத்தைக் குறித்தது. உயர்நிலையுகம் : குறுந். 361 : 2.
அருந்ததி யனைய கற்பு : பெரும்பாண். 302-4; கலித். 1 : 21; புறநா.
122 : 8 ; திரிகடுகம், 1. குரும்பை மணிப்பூண்-குரும்பை போன்ற
வடிவுள்ள மணிகளையுடைய கிண்கிணி; நற். 269 :1. புதல்வன்
தாய் : ஐங். 90 : 4, குறிப்பு. புதல்வன்தாய் விருந்து பெறுதலும்
உரியள். விருந்தயர்தல் தலைவிக்குரியது; ஐங். 482 : 1-2.
(பி-ம்.) 1 ‘மணிப்பூண்ட? ( 2 )