444

5. முல்லை

(45) பாசறைப் பத்து


444. பெருந்தோண் மடவரற் காண்குவெந் தில்ல
    நீண்மதி லரணம் பாய்ந்தெனத் தொடிபிளந்து
    வைந்நுதி 1மழுகிய தடங்கோட் டியானை
    வென்வேல் வேந்தன் பகைதணிந்
    தின்னுந் தன்னாட்டு முன்னுதல் பெறினே.

இதுவுமது.

    குறிப்பு. தோளையுடைய மடவரலைக் காண்குவெம். பாய்ந்தென-
பாய. அரணத்தில் பாய்ந்தென. தொடி-பூண். வைந்நுதி-
கூர்மையான நுனி, அடி, 2-3 : பதிற். 53 : 21; அகநா. 24 : 11-3.
இன்னும்; உம்மை இறந்தது தழுவியது. முன்னுதல்-செல்லுதலை.
முன்னுதல் பெறின் மடவரற் காண்குவெம்.

  (பி-ம்) 1 ‘மழுங்கிய’ ( 4 )