447

5. முல்லை

(45) பாசறைப் பத்து


447. பிணிவீடு பெறுக மன்னவன் றொழிலே
    பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை
    ஆடு சிறைவண் 1டவிழ்ப்ப
    2பாடு சான்ற காண்கம்வா ணுதலே.

     எ-து வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் அவன் வினை
முற்றி மீளும் வேட்கையனாய்ப் பருவவரவின்கண் தலைமகளை
நினைத்துச் சொல்லியது.

     குறிப்பு. பிணிவீடு-கட்டு விடுதல். தொழில் பிணிவீடு பெறுக.
தளவு-செம்முல்லை, சிரல்-மீன்கொத்தி. தளவினது செம்முகைக்குச்
சிரல்வாய் உவமை; ?சிரல்வாய் வனப்பின வாகி.......................... தளவந்
தகைந்தன? (கார். 36) சிறை-சிறகு. பாடுசான்ற-பெருமை மிகுந்
தன. காண்கம்-பார்ப்போம். (பி-ம்.) 1 ‘டழைப்ப? 2 ‘பாடல்? ( 7 )