479

5. முல்லை

(48) பாணன் பத்து


479. சொல்லுமதி பாண சொல்லுதோ றினிய
    நாடிடை விலங்கிய வெம்வயி னாடொறும்
    அரும்பணி கலந்த வருளில் வாடை
    தனிமை யெள்ளும் பொழுதில்
    பனிமலர்க் கண்ணி கூறிய தெமக்கே.

     எ-து தலைவி விடத் தூதாய்ச் சென்ற பாணன் மாற்றம் கூறக்
கேட்ட தலைமகன், ‘இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாக இன்னுங்
கூறவேண்டும்? எனக் கூறியது.

    குறிப்பு. சொல்லுமதி-சொல்வாயாக. சொல்லுதோறினிய-
சொல்லுந்தோறும் இனிமையாக இருக்கின்றன. நாடிடை விலங்கிய-
பல நாடுகளை இடையிட்டுப் பிரிந்த. வாடை-வாடைக்காற்று.
தனிமை எள்ளும்பொழுதில்-தனிமையை இகழும் காலத்தில்.
கண்ணி-தலைவி பாண கண்ணி கூறியது எமக்குச் சொல்லுமதி,
இனிய. ( 9 )