49

(5) புலவிப் பத்து


49. அஞ்சி லோதி யசைநடைப் பாண்மகள்
   சின்மீன் சொரிந்து பன்னெற் பெறூஉம்
   யாண ரூரநின் பாண்மகன்
   யார்நலஞ் சிதையப் பொய்க்குமோ வினியே.

  எ-து பாணன் வாயிலாகப் பரத்தையோடு கூடினானென்பது
கேட்ட தலைமகள் தனக்கும் பாணனாற் காதன்மை கூறுவிப்பான்
புக்க தலைமகற்குச் சொல்லியது.

  குறிப்பு. அம் சில் ஓதி - அழகிய சிலவாகிய கூந்தலையுடைய,
அசைநடை-சுமையால் ஓய்ந்த நடையையுடைய. பாண்மகள் மீன்
சொரிந்து நெல்லைப் பெறுதல் : ஐங். 48, குறிப்பு. நலம் - அழகு.
பொய்க்குமோ - பொய்சொல்வானோ. எல்லோரும் அவனது பொய்ம்
மையை அறிந்தனர் என்பதாம்.                                          ( 9 )