61

(7) கிழத்திகூற்றுப் பத்து


61. நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
  நெடுநீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம்
  கைவண் மத்தி கழாஅ ரன்ன
  நல்லோர் நல்லோர் நாடி
  வதுவை யயர 1விரும்புதி நீயே.

 எ-து ‘வதுவையயர்ந்தா ளொருபரத்தையைச் சின்னாளில்
விட்டு மற்றொரு பரத்தையை வதுவையயர்ந்தான்? என்பதறிந்த
தலைமகள் அவன் மனைவயிற் புக்குழிப் புலந்தாளாக, ‘இது மறைத்தற்
கரிது? என உடன்பட்டு, ?இனி என்னிடத்து இவ்வாறு நிகழாது?
என்றாற்கு அவள் சொல்லியது.

குறிப்பு. நறு வடி மாத்து - மணமுள்ள வடுவையுடைய
மாமரத்தினின்றும் ; நறுவடிமா : நற். 243 : 3 ; குறுந். 331 : 5-6.
விளைந்துகு தீம்பழம் : குறுந். 8 : 1. துடுமென : புறநா. 243 : 9,
மாம்பழம் பொய்கையில் வீழ்தல் : நற் 280 : 1-3 ; குறுந். 8 : 1-2
மத்தி : ஓர் உபகாரி ; கழார் - அவனுடைய ஊர் ; இது சோழ
நாட்டிலுள்ளது என்று தெரிகிறது. நல்லோர் நல்லோர் நாடி -
நல்ல நல்ல மகளிரைத் தேடி. வதுவையயர - மணம் புணர.
விரும்புதி - விரும்புகின்றாய்.

   (பி-ம்.) 1‘விகுமதி நீயே?    ( 1 )