64
(7) கிழத்திகூற்றுப் பத்து

 


64. அலமர லாயமோ டமர்துணை தழீஇ
  நலமிகு புதுப்புன லாடக் கண்டோர்
  ஒருவரு மிருவரு மல்லர்
  பலரே தெய்யவெம் மறையா தீமே.

  எ-து தலைமகன் பரத்தையரோடு புனலாடினா னென்பதறிந்த
தலைமகள் அவன் மறைத்துழிச் சொல்லியது.

குறிப்பு. அலமரல் ஆயம்-சுழலுகின்ற ஆயத்தார். அமர்துணை -
அமர்ந்த பரத்தையரை. பலரே - பல பரத்தையரே, தெய்ய : அசைச்
சொல். எம்மறையாதீமே - எம்மை ஒளியாதே. ( 4 )