65
(7) கிழத்திகூற்றுப் பத்து

 


65. கரும்புநடு 1பாத்தியிற் 2கலித்த வாம்பல்
 சுரும்புபசி களையும் பெரும்புன லூர
 புதல்வனை 3யீன்றவெம் மேனி
 முயங்கன்மோ தெய்யநின் மார்புசிதைப் பதுவே.

 எ-து ஆற்றாமையே வாயிலாகப்புக்க தலைமகற்குத் தலைமகள்
சொல்லியது.

 குறிப்பு. கரும்பு நடு பாத்தியில் - கரும்பு நட்ட பாத்தியில்; குறுந்.
180 : 3, 262 : 7 : பதிற். 13 : 3. கலித்த-செழித்த. முயங்கன்மோ - முயங்
காதே. நின் மார்பு சிதைப்பதுவே - உன்மார்பினது நறுநாற்றத்தை
அது சிதைப்பதாகும்.

 (மேற்.) மு. “இது வினையுவமப்போலி ; என்னை? தாமரையினை
விளைப்ப தற்கன்றிக் கரும்பு நடுதற்குச் செய்த பாத்தியுள் தானே
விளைந்த தாமரை சுரும்பின் பசி தீர்க்கு மூரன் என்றாள். இதன்
கருத்து : அது காதற் பரத்தையர்க்கும் இற் பரத்தையர்க்குமென்று
அமைக்கப்பட்ட கோயிலுள் யாமுமுளமாகி இல்லறம் பூண்டு விருந்
தோம்புகின்றனம் அதுபோல வென்பதாகலான் உவமைக்குப் பிறி
தொரு பொருள் எதிர்ந்து உவமஞ் செய்யாது ஆண்டுப் பிறந்தன
வற்றோடு நோக்கிக் கருத்தினாற்கொள்ள வைத்தலின் இஃது உள்ளு
றை யுவமமாயிற்று. அவற்றுள்ளும் இது சுரும்பு பசிகளையும் தொழி
லோடு விருந்தோம்புதற் றொழில் உவமங்கொள்ள நின்றமையின்
வினையுவமப் போலியாயிற்று. இங்ஙனம் கூறவே இதனை
இப்பொருண்மைத் தென்பதெல்லாம் உணருமாறென்னையெனின்
முன்னர், ‘துணிவொடு வரூஉந் துணிவினோர் கொளினே’ எனல்
வேண்டியது இதன் அருமை நோக்கியன்றே யென்பது. அல்லாக்
காற் கரும்புநடு பாத்திக் கலித்த தாமரை, சுரும்பு பசிகளையும் பெரும்
புனலூர என்பது பயமில வென்பது கூறலாமென்பது” (தொல்,
உவம. 25, பேர்.) புதல்வன் தோன்றிய நெய்யணி நயந்த கிழ
வனை நெஞ்சு புண்ணுறுமாறு பண்ணிச்செறிவுநீக்கிய இளிவந்த
நிலையின்கண் தலைவிக்குக் கூற்று நிகழும் (தொல். கற்பு. 6, இளம்.),
புதல்வற் பயந்தகாலத்துப் பிரிவு பற்றித் தலைவி கூறியது (தொல்.
கற்பு. 6, ந.). பரத்தையினது இல்லிலிருந்து தலைவனது வரவைப்
பாங்கி கூற அதையுணர்ந்த தலைவி தலைவனொடு புலந்தது (நம்பி.
கற்பு. 7)

 ,(பி-ம்.) 1 ‘பாத்திக் கலித்த,’ ‘பாத்தி கலித்த’ 2 ‘கதித்த வாம்பல்
யீன்றதென் மேனி,’ 3 யீன்றவென் முயங்கல்’ 4 ‘வதுவே தெய்ய
நின் மார்பு’