67
(7) கிழத்திகூற்றுப் பத்து

 


67. மடவ ளம்மநீ யினிக்கொண் டோளே
  தன்னொடு நிகரா வென்னொடு நிகரிப்
  பெருநலந் தருக்கு மென்ப விரிமலர்த்
  தாதுண் வண்டினும் 1பலரே
  ஓதி யொண்ணுதல் பசப்பித் தோரே.

  எ-து தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை புறனுரைத்தா
ளெனக் கேட்ட தலைவி தலைமகன் வந்துழி அவள் திறத்தாராய்
நின்று ஒழுகும் வாயில்கள் கேட்பச் சொல்லியது.

  குறிப்பு. மடவள் - அறிவில்லாதவள். இனி - இப்பொழுது.
கொண்டோள் : காதற்பரத்தை. கொண்டோள்மடவள், நிகரா - மாறு
படாத,. நிகரி - மாறுபட்டு, தருக்கும் - மனச்செருக்குக் கொள்வாள்.
வண்டு தாதுண் மலரினும் என மாறுக; தலைவனுக்கு வண்டு.
ஐங். 90. ஓதி ஒண்ணுதல் : குறுந். 34 : 7 ; கம்ப. மந்தரை சூழ்ச்சி
86 நுதல் பசத்தல் : குறுந். 4 : 85, 87 : 4. பசப்பித்தோர் பலர். கொண்
டோள் தருக்கும் என்ப ; அதனால் மடவள்.

  (மேற்.) மு. ‘காமக்கிழத்தியர் நலம் பாராட்டிய தீமையின் முடிக்
கும் பொருளின்கண் தலைவி கூற்று நிகழும் ; இதனுள், இப்பொழுது
கிடையாதது கிடைத்ததாக வரைந்து கொண்ட பரத்தை தன்
னொடு இளமைச் செவ்வி ஒவ்வா என்னையும் தன்னொடு ஒப்பித்துத்
தன் பெரிய நலத்தாலே மாறுபடு மென்பவென அவள் நலத்தைப்
பாராட்டியவாறும், நீ பசப்பித்தோர் வண்டு தாதுண்ட மலரினும்
பலரெனத் தீமையின் முடித்தவாறும் காண்க? (தொல். கற்பு. 6, ந.)
     (பி-ம்.) 1 ‘பலர் நீ,?         ( 7 )