68
(7) கிழத்திகூற்றுப் பத்து

 


68. கன்னி விடியற் 1கணைக்கா லாம்பல்
  தாமரை போல மலரு மூர
  பேணா ளோநின் பெண்டே
  2யான்ற னடக்கவுந் தானடங் கலளே.

  எ-து பரத்தை தான் தலைமகளைப் புறங்கூறிவைத்துத் தன்னைத்
தலைமகள் புறங்கூறினாளாகப் பிறர்க்குக் கூறினமைகேட்ட தலைவி
தலைமகற்குச் சொல்லியது.

 குறிப்பு. கன்னிவிடியல்-மிக்க இளமையான காலைநேரம்;
குமரியிருட்டுப்போல நின்றது. கணைக்கால் - திரண்டகாலையுடைய.
ஆம்பல் - சேதாம்பல் ; சிலப். 2 : 14, பேணாளோ - அடக்கத்தைப் பாது
காவாளோ. பெண்டு - காதற்பரத்தை, யான் தன் அடக்கவும்-யான்
அவளை அடக்கவும். அடங்கலள் - அடங்கவில்லை ; அடக்கம் கொள்
ளாது என்னைப் பற்றிப் புறங்கூறினாள் என்பது கருத்து.

  (பி-ம்.) 1 ‘கனைக்கா லாம்பல்? 2 ‘யாந்தன்? ( 8 )