70
(7) கிழத்திகூற்றுப் பத்து

 


70. பழனப் பன்மீ னருந்த நாரை
  கழனி மருதின் சென்னிச் சேக்கும்
  மாநீர்ப் பொய்கை யாண ரூர
  தூயர் நறியர்நின் பெண்டிர்
  1பேஎ யனையமியாஞ் சேய்பயந் தனமே.

  எ-து பரத்தையரோடு பொழுதுபோக்கி 2நெடிது துய்த்துவந்த
தலைமகனோடு தலைமகள் புலந்து சொல்லியது.

 குறிப்பு. அருந்த-அருந்திய; குறுந். 114 : 4 ; அருந்தச் சேக்கும்
எனினுமாம். மருதின் சென்னிச் சேக்கும்-மருத மரத்தின் உச்சியில்
தங்கும். சேக்கும் ஊர. நறியர்-நறுமணம் பொருந்தியவர். பேயனை
யம்-பேயைப்போன்றுள்ளேம். சேய்-புதல்வனை. யாம் சேய் பயந்
தனம், அதனால் பேயனையம், நின் பெண்டிர் தூயர் நறியர், அங்குச்
செல்க என முடிக்க.

  (பி-ம்.) 1 ‘பேஎ, யனையம் யாஞ்சேய் பயந்தனை சென்மே?
2 ‘நெடிதுய்த்து?. ( 10 )

(7) கிழத்திகூற்றுப்பத்து முற்றிற்று.