எ-து பாணற்கு வாயில்மறுத்த தலைமகள் பின் அப்பாண
னோடு தலைமகன் புகுந்து தன்காதன்மை கூறியவழிச் சொல்லியது.
(ப-ரை.) மாணிழையாயம் அறியுமென்ற கருத்து : நீ கூறும்
காதன்மை பொய்யென்பது ஆயமெல்லாம் அறியும்; நான் இதனை
மெய்யென்று கொள்ளினும் அவர் பொறாரென்பதாம்.
கெடிறு சொரிந்த வட்டி நிறைய மனையோள் பயறுநிறைக்கும்
உரவென்றது நீ நின்காதல் சொல்லி விடுத்து அவர் சிறந்த காதல்
சொல்லி வரவிடப் பெறுவாய் எ-று.
குறிப்பு. முன் எயிற்றுப்பாண்மகள் - முள்ளைப்போலக் கூறிய
பற்களையுடைய பாண்மகளது; முள் எயிறு : குறுந் 262 : 4.
கெடிறு-ஒரு சாதிமீன்; ஐங். 167 : 2; புறநா. 18 : 10; பெருங்
4; 10 : 101 ; இது கெளிறெனவும் வழங்கும். அகன் பெருவட்டி -
அகன்ற பெரிய கடகப்பெட்டி; வட்டி : ஐங். 48 : 2 : மலைபடு. 152 ;
குறுந். 155 : 2. பாண் மகன் வட்டியில் மீன் சொரிதல் : ஐங்.
48, 1-2; நற், 210 : 3-4. மனையோள்-இல்லாள். அரிகாற் பெரும்பயறு - அரிந்த தாள்களையுடைய இடத்தான்றில் தேதி
விளைந்த பெரும்பயறு. ஆயம்-பாங்கியர். நீ பொய்த்தலை ஆயம்
அறியும். ( 7 )