10

1. மருதம் ( 1 )
(
) வேட்கைப் பத்து


10, வழி யாதன் வாழி யவினி
  மாரி வாய்க்க வளநனி சிறக்க
  எனவேட் டோளே யாயே யாமே
  பூத்த மாஅத்துப் புலாலஞ் சிறுமீன்
  தண்டுறை யூரன் றன்னொடு
  கொண்டனன் செல்க வெனவேட் டேமே.

இதுவுமது.

 (ப-ரை.) இவள் நின்னை எதிர்பட்டவன்றே வரைந்தாயெனக்
கொண்டு இல்லறத்திற்கு வேண்டுவன விரும்பி ஒழுகினாள்; யாங்கள்,
‘அவன் வரைந்துகொள்ள நினையானாயின், பூத்த மாவினையும் புலா
லஞ்சிறுமீனையுமுடைய ஊரனாதலால், அதற்கேற்ப, எம்மூர்க்கண்
அறத்தொடுநிலை வகையாற் கற்புடைமையும் எதிர்ப்பாட்டினால்
அலரும் கிளைப்பவாயினும் உடன்கொண்டு செல்வானாக’ எனவிரும்பி
னேம் எ-று.

குறிப்பு. மாரி வாய்க்க-மழை பருவம் பொய்யாமற் பொய்க.
வளம்-செல்வம். பூத்த மாமரங்களையும் புலால் நாற்றம் வீசும் சிறு
மீன்களையும் உடைய. பூவும் புலாலும்: ஐங். 1 : 4, குறிப்பு. அடி
5-6: ஐங். 7 : 5-6 .                                                      ( 10 )

( 1 ) வேட்கைப்பத்து முற்றிற்று.