எ-து வரைவிடை வைத்துப் பிரிந்த அணுமைக்கண்ணே
ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி கூறியது.
(ப-ரை.) வேங்கைமலர் அகலறையிலே பரக்கும் நாடனென்றது
நம் பொல்லா ஒழுக்கம் மறைய நல்லொழுக்கம் நமக்கு உதவும் நன்
மையை உடையானென்பதாம்.
குறிப்பு. கருங்கால் வேங்கை-கரிய அடிமரத்தையுடைய
வேங்கை மரத்தினது; குறுந். 26 : 1. மா தகட்டு ஒள் வீ-பெரிய
இதழ்களை உடைய ஒளி பொருந்திய மலர். அடி, 1: புறநா. 202 :
18-9. வியலறை-பெரிய பாறையை. வரிப்ப-கோலஞ் செய்ய. தாஅம்-
தாவும், பரக்கும், வேங்கைப் பூ கல்லின் மேல் உகுதல் : நற். 257 :
5-6; குறுந். 47 : 1; அகநா. 232 : 7-9. பிரிந்தென-பிரிய. பசப்பது-
பசலைநிறங் கொள்வது.
(மேற்) மு. திணை மயக்குறுதலுள் இது குறிஞ்சியுட் பாலை
(தொல். அகத். 9, ந.) (பி-ம்.) 1 ‘தாஅய? ( 9 )