122


(13) கிழவற்குரைத்த பத்து


122, கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே
   ஒள்ளிழை யுயர்மணல் வீழ்ந்தென
   வெள்ளாங் குருகை வினவு வோளே.

  குறிப்பு. ஒள்ளிழை-ஒளி பொருந்திய ஆபரணம், வீழ்ந்தென
வீழ்ந்ததாக. வெள்ளாங்குருகு-ஒருவகைப் பறவை; ஐங். 151-60;
நற். 70 : 1 வினவுவோளாகிய நின் கேளைக் கண்டிகுமல்லமோ.
இதனால் அவளது இளமை கூறிப் பழித்தாள்.

 (மேற்.) மு, காமக்கிழத்தி நலத்தினைப் பாராட்டிய தீமையின்
முடிக்கும் பொருளின்கண் லைவிக்குக் கூற்று நிகழும் (தொல். கற்பு.
6, இளம்.). தலைவி மற்றொருத்தி குணம் இத்தன்மையள் எனச்
சொல்லித் தலைமகனது குறிப்பினையறிதற்கு முரியள் (தொல். பொருள்
38, இளம்.). திணைமயக்குறுதலுள் இப்பத்தும் (ஐங். 121-30)
நெய்தற்கண் மருதம்; இவை பெதும்பைப் பருவத்தாள் ஒரு தலைவி
யொடு வேட்கை நிகழ்ந்தமையைத் தலைவி கூறித் தலைவன்
குறிப்புணர்ந்தது (தொல். அகத். 12, ந.). தலைவன் வரையக் கருதி
னாளோர் தலைவியை இனையளெனக்கூறி அவள்மாட்டு இவன்
எத்தன்மையனென்று விதுப்புற்றுக் கூறியது; இது தலைவன் கூற
வுணராது தான் வேறொன்று கூறி அவன் குறிப்பு அறியக் கருதுத
லின் வழுவாயமைந்தது (தொல். பொருள். 40, ந.), உரிப்பொருள்
திணைமயங்கி வந்தது (நம்பி. ஒழிபு 42). பெதும்பைப் பருவத்
தாளோர் தலைவியொடு வேட்கை நிகழ்ந்தமையைத் தலைவி கூறித்
தலைவன் குறிப் புணர்ந்தது; இதில் நெய்தற்றிணையொடு உரிப்
பொருள் மயங்கி வந்தது (இ-வி. 394)         ( 2 )