89

(9) புலவி விராய பத்து

 


89. அம்ம வாழி பாண வெவ்வைக்
 கெவன்பெரி தளிக்கு மென்ப பழனத்து
 வண்டுதா தூது மூரன்
 1பெண்டென விரும்பின் றவடன் பண்பே.

 எ-து ‘தலைமகன் தலைமகளைப் போற்றி யொழுகா நின்றான்
2என்பது கேட்ட காதற்பரத்தை அவன் பாணனுக்குச் சொல்லு
வாளாய் அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

 (ப-ரை.) அவன் ஆங்கு ஒழுகுகின்றது அவள் பண்புடைமை
யல்லது வேறு காரணம் இல்லையென இகழ்ந்து கூறியவாறாம்.

 குறிப்பு. எவ்வை-எம் தங்கை; என்றது தலைவியை; ஐங். 88 : 2.
எவன் - யாது? அளிக்கும்-அருள்செய்யும். விரும்பின்று - விரும்
பியது. அவள் தன் - அத்தலைவியினுடைய. அவள் தன் பண்பே,
அளிக்கும் என்ப, எவன்.

 (பி-ம்.) 1 ‘வேண்டென விரும்பின்று’ 2 ‘என்பது காதற் பரத்தை’, ( 9 )