| 196. கோடீ ரெல்வளைக் 1கொழும்பல் கூந்தல் ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயின் தெண்கழிச் சேயிறாப் படூஉம் தண்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ. | எ-து குறைமறுக்கப்பட்ட தலைமகன் பின்னும் குறை வேண்டிய வழித் தோழி சொல்லியது. (ப-ரை.) தெண்கழிச் சேயிறாப்படூஉம் சேர்ப்பவென்றது நினைத்தன அகப்படுத்தும் துறைவ எ-று. குறிப்பு. கொழும்பல் கூந்தல்-செழித்த பலவாகிய கூந்தல். வளை வேறு தொடி வேறுஎன்பது அறியக் கிடக்கின்றது. மடவரல்- தலைவியை, வேண்டுதியாயின்-விரும்புவாயானால், சேயிறா-சிவந்த இறா மீன்கள். படூஉம்-அகப்படுத்தும், வரைந்தனை கொண்மோ- வரைந்து கொள்வாயாக. (மேற்.)மு. உலகத்தார் மகட்கொள்ளுமாறு கொள்ளெனக் கூறு தல் (தொல். களவு. 24, இளம்.). முன்னுறு புணர்ச்சி அறியாள் போற் கரந்த தோழி உலகத்தாரைப் போல வரைந்து கொள்ளெனக் கூறித் தலைவனை நீக்கல் (தொல். களவு. 23, ந.). பாங்கி உலகிய லுரைத்தல் (நம்பி. களவு. 28); இ. வி. 509. (பி-ம்.) 1 ‘கொழுமணிக்கூந்தல்’ ( 6 ) | |