எ-து கழறித்தெருட்டற் 3பாலராகிய அகம்புகன் மரபின்
வாயில்கள் புகுந்துழித் தலைவனையும் பாணன் முதலாகிய பக்கத்
தாரையும் இகழ்ந்து தலைவி கூறியது.
(ப-ரை.) அன்பில்லாத முதலையென்றது தலைவனை நோக்கிய
தெனவும், பொய்கையில் வெண்பூ வென்றது புறத்தொழுக்கத்திற்
குத் துணையாகிய அறிவிலாதாரை நோக்கியதெனவும் கொள்க.
குறிப்பு. பார்ப்பு-பிள்ளையை. அன்பில்-அன்பில்லாத, தன்
பார்ப்பை முதலை தின்னுதல்: ஐங். 24:2, குறிப்பு. வெண்பூ-ஆம்பற்
பூ. தன்சொல் உணர்ந்தோர்-தன்சொல்லை நினைந்து தேறியிருப்
பவரது. பொன்போல் செய்யும்- பொன்னைப்போலப் பசலை பெறச்
செய்யும். பொய்கையை யுடையது அவனூர்; அதனால் ஊர்கிழ
வோன் தன்சொல் உணர்ந்தோர் மேனியைப் பொன்போற் செய்யும்.
(மேற்.) அடி, 3-4, போல என்பது உருவுவமத்திற்குரிய சொல்
லாம் (தொல். உவம. 16, இளம்.). மு. உள்ளுறையுவமத்தில் தலைவன்
கொடுமையும் தலைவி பேதைமையும் உடனுவமங்கொள்ள நின்றது;
வினையுவமமும் உருவுவமமும் ஒரு செய்யுளுள்ளே தொடர்ந்து
வந்தன; பார்ப்பென்னும் இளமைப் பெயர் தவழ்வனவற்றிற்கும்
உரித்து: தொல், பொருள். 36, ந., உவம. 25, மரபு. 5, பேர்.
(பி-ம்.) 1 ‘தவனூர்ரேயதனால்’; தவரூரேயதனால்’ 2 ‘பொன்
போலச் செய்யும்’ 3 ‘பாலாராகிய’ ( 1 )