5

1. மருதம் ( 1 )
(
) வேட்கைப் பத்து


5.வாழி யாதன் வாழி யவினி
 பசியில் லாகுக பிணிசே ணீங்குக
 எனவேட் டோளே யாயே யாமே
 முதலைப் போத்து முழுமீ னாரும்
 தண்டுறை யூரன் றேரெம்
 முன்கடை நிற்க வெனவேட் டேமே.

இதுவுமது.

  (ப-ரை) இவள் இல்லறமே விரும்பி ஒழுகினால்; யாங்கள்,
‘அவன் தேர் பிறமகளிர் முன்கடை நிற்றலொழிந்து எம் முன்கடை
நிற்க? என விரும்பினேம் எ-று.

  ‘முதலை......................ஊரன்? என்றது ஒருங்குவாழ்வாரைப் பழமை
நோக்காது உயிர் கவர்வானென்பதாம்.

  குறிப்பு. இல்லாகுக-இல்லையாகுக; ஐங். 9:2. பிணி-நோய்
சேண்-நெடுந் துரத்தில். பசியும் பிணியும் இல்லாதிருத்தல்: பதிற்.
13:27. முதலைப் போத்து-ஆண்முதலை. முழுமீன் ஆரும்-பெரிய
மீன்களை உண்ணும்.

  பிறமகளிர் முன்கடை-பரத்தையர் வீட்டு வாயிலில். ஒருங்கு
வாழ்வார்-உடன் வாழ்பவர். (தொல். மரபு. 43, பேர்.)

  (மேற்.) அடி, 4. போத்தென்னும் ஆண்பெயர் முதலைக்கு வரும்.       ( 5 )