எ-து பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனோடு தலைமகள்
புலந்து கூறியது.
குறிப்பு. பள்ளி - இடம், புலவுநாறு நீர்நாய் - புலால் நாற்றம்
பொருந்திய நீர்நாய். வாளை பெறும் - வாளைமீனை நாட்காலை
உணவாகப் பெறுகின்ற. நீர்நாய் ஊரன் : குறுந். 364 : 1-2 ;
அகநா. 336 : 4-5, 386 : 1-2 ; புறநா. 283 : 2 . எம்நலம் - எம்
அழகு. தொலைவதாயினும் - கெடுவதாக இருந்தாலும். துன்னலம் -
பொருந்தமாட்டோம். பிறர் - பிற பெண்டிரை ; பரத்தையரை.
மார்பு துன்னலம் ; “பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொது
வுண்பர், நண்ணேன் பரத்தநின் மார்பு” (குறள், 1311).
(மேற்,) மு. ‘இது பிறப்புவமப் போலி ; நல்ல குலத்திற் பிறந்தும்
இழிந்தாரைத் தோய்ந்தமையான் அவர் நாற்றமே நாறியது, அவரையே பாதுகாவாய், மேற்குலத்துப் பிறந்த எம்மைத் தீண்டலென்பாள் அஃதெல்லாம் விளங்கக் கூறாது பொய்கைப் பள்ளிப் பிறந்த
நீர்நாய் முன்னாள் தின்ற வாளைமீன் புலவுநாற்றத்தோடும் பின்னாளும்
அதனையே வேண்டும் ஊரன் என்றமையிற் பரத்தையர் பிறப்பு
இழிந்தமையும் தலைவிபிறப்பு உயர்ந்தமையும் கூறி அவன் பிறப்பின்
உயர்வும் கூறினமையின் இது பிறப்புவமப் போலியாயிற்று. இவை
யெல்லாம் கருதிக்கூறிற் செய்யுட்குச் சிறப்பின்றெனவும், வாளாது
நீர்நாய் வாளைபெறூஉமூர என்றதனாள் ஒரு பயனின்றெனவுங்
ெ்காள்க’ (தொல். உவம. 25, பேர்.)
(பி-ம்.) 1 ‘நீர்வாய்’ ( 3 )