145


(15) ஞாழற்பத்து


145. எக்கர் ஞாழற் சிறியிலைப் பெருஞ்சினை
   ஓதம் வாங்குந் துறைவன்
   மாயோள் பசலை நீக்கின னினியே.

  எ-து ‘1வரைவுமறுத்த தமர் உடம்படுமாற்றாற் சான்றோரைத்
தலைமகன் விடுத்ததறிந்த தோழி தலைமகள் கேட்குமாற்றாற்
சொல்லியது.
  (ப-ரை.) ஞாழற் சினையை ஓதம் வளைக்கும் துறைவனென்றது
தன்வழிவாராத சுற்றத்தாரைத் தன்வழியாக்குகின்றானென்றதாம்.
  குறிப்பு. சிறியிலைப் பெருஞ்சினை-சிறிய இலையையுடைய பெரிய
கிளையை, ஓதம்-கடல். வாங்கும்-வளைக்கும். மாயோள்-மாமை நிறத்
தினையுடையோள்; ஐங். 306 : 4, 324 : 5; கலித். 29 : 7, இனி;
துறைவன் மாயோளது பசலையை நீக்கினன்.
   (பி-ம்.) 1 ‘வரைவு மடுத்த?     ( 5 )