எ-து பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகற்குச் சொல்லியது.
(ப-ரை) வெள்ளிலோத்திரத்துக் குளிர்ச்சியையுடைய மலரை
ஆற்றின் வெம்மைதீரச் செல்வோர் அணிந்து செல்வரென்றுழி
வெம்மை கூறியவாறாயிற்று.
குறிப்பு. வெள்ளோத்திரம்-பாலை நிலமரம். மையில் வாலிணர் -
குற்றமில்லாத வெண்மையான பூங்கொத்தை;” “வெள்ளிலோத்திரம்
விளங்கும் வெண்மலர்” (சீவக. 2685.) வென்னிக் கூட்டும் - கூந்த
லில் வைக்கும். இறக்குவையாயின் - கடந்து செல்வாயானால். நாட,
பெரிது வருந்துவள். ( 1 )