எ-து உடன்போக்கின்கண் இடைச்சுரத்துக் கண்டார் சொல்
லியது.
குறிப்பு. பைங்காய் நெல்லி - பசுமையான நெல்லிக்காயை
மிசைந்து-உண்டு மராத்த-வெண்கடம்ப மரத்தின் அடியிலுள்ள.
அளியர்-அளிக்கத் தக்கவர். வார்சிறை - நீண்ட சிறகு மகன்றில்-
ஒருவகைப் பறவை: குறுந், 57 : 2; சீவக. 1250; பெண் அன்றில்
என்றும் கூறுவர். மகன்றிற் புணர்ச்சி : ?நீருறை மகன்றிற் புணர்ச்சி
போல பிரிவரிதாகிய ?(குறுந். 57 : 2-3); பரி. 8 : 44. நிழலிருந்
தோராகிய காதலோர் யார் கொல்.
(பி-ம்) 1‘குறுங்கா னகன்றி? ( 1 )