208

3. குறிஞ்சி

(21) அன்னாய்வாழிப் பத்து


208. அன்னாய் வாழிவேண் டன்னை கானவர்
   கிழங்ககழ் நெடுங்குழி மல்க வேங்கைப்
   பொன்மலி புதுவீத் தாஅ மவர்நாட்டு
   மணிநிற மார்வரை மறைதொறிவள்
   அறைமலர் நெடுங்க ணார்ந்தன பனியே

 எ-து செவிலிக்கு அறத்தொடு நின்ற தோழி அவளால் வரைவு
மாட்சிமைப்பட்டபின்பு, ‘இவள் இவ்வாறுபட்ட வருத்தமெல்லாம்
நின்னிற்றீர்ந்தது’ என்பது குறிப்பிற்றோன்ற அவட்குச் சொல்லியது.

 (ப-ரை.) கிழங்ககழ் குழிநிறைய வேங்கைமலர் பரக்குமென்றது
கொள்வார்க்குப் பயன்பட்டுத் தமக்குவந்த குறையைத் தம் புகழ்
நிறைக்கும் பெருமையுடையாரென்பதாம்.

  குறிப்பு. கானவர்-காட்டிலுள்ளோர். கிழங்ககழ் நெடுங்குழி-
கிழங்கு எடுத்தற்காகத் தோண்டப்பட்ட பெரிய குழி. மல்க நிறைய
புதுவீ-புதியமலர்கள். தாஅம்-பரக்கும். கிழங்ககழ் குழியில் மலர்
வீழல்: குறுந். 233 : 1-2; சிலப். 10 : 68-9. மணிநிற மால்வரை :
ஐங். 207 : 4. மறைதொறு-மறையும்பொழுது எல்லாம். கண்பனி :
குறுந். 348 : 4 ஆர்ந்தன-நிறைந்தன. பனி-நீர்த்துளி. வரைமறை
தொறு கண் பனியார்ந்தன. தலைவன் குன்றுமறையத் தலைவி
வருந்தல் : குறுந். 240 : 6-7.   ( 8 )