எ-து வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் மீட்சியுணர்ந்த
தோழி ஆற்றாளாகிய தலைமகட்குச் சொல்லியது.
(ப-ரை.) இவணென்றது இவ்விடத்து எ-று. வேங்கைப் பூவை
மானினம் ஆருமென்றது அவன்மனைப் பெருஞ்செல்வம் நின்கிளை
யாகிய நாங்களும் நின்னோடு நுகர்வேமென்பதாம்.
குறிப்பு. . வேங்கைப் பொன் மருள் நறுவீ-வேங்கை மரத்தினது
பொன்னொத்த நறிய மலர். மானினம்-மான் கூட்டம். மேயல் ஆரும்-
மேய்கின்ற. வேங்கைப் பூவை மான்கள் உண்ணுதல் : புறநா.
224 : 14-6.
(பி-ம்.) 1 ‘பசப்பறைவ? ( 7 )