எ-து தலைமகன் குறித்த பருவ வரவின்கண் மாலைப்பொழுது
கண்டு ஆற்றளாகி தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
குறிப்பு. குறுஞ்சினை - குறுகிய கிளைகளையுடைய. வேம்பின் நறும்
பழம்- வேம்பினது வாசனை பொருந்திய பழத்தை உணீஇய. உண்
ணுதற்கு. வாவல் உகக்கும் -வௌவால் உயரச் செல்லும். மாலை
யில் பழுமரம் நோக்கி வௌவால் செல்லுதல்: ஐங். 378 : 1-2:
குறுந். 172 : 1-2 இன்றுகொல் - இல்லையோ. நாட்டு மாலையும்
இன்றுகொல்.
(மேற்) மு திணைமயக்குறுதலுள் பாலைக்கண் மாலை வந்தது.
(தொல். அகத் 12, ந); இ.வி. 394 (பி-ம்) 1 ‘லுகுக்கு’, ‘லுவக்கு’
2'தோழியவர்’ ( 9 )