367

4 பாலை

(37) முன்னிலைப் பத்து


367. பொரியரைக் கோங்கின் பொன்மருள் பசுவீ
    விரியிணர் வேங்கையொடு 1வேறுபட மிலைச்சி
    விரவுமல ரணிந்த வேனிற் கான்யாற்றுத்
    தேரொடு குறுக வந்தோன்
    பேரோடு புணர்ந்தன் றன்னை 2யிவ ளுயிரே.

     எ-து நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு
அறத்தொடு நின்றது

   .(ப-ரை) . ‘கான்யாற்றுத் தேரொடு குறுக வந்தோன்? என்றது
கான்யாற்று யாங்கள் அழுத்துழிக் குறுக வந்தோன் (எ-று) எனவே
புனல்தரு புணர்ச்சி கூறியவாறாயிற்று. ‘பேரொடு புணர்ந்தன்று
இவளுயிர்? என்றது அன்றுதொட்டு இன்னான் தந்த உயிரென
அவன் பேரொடுபட்டது இவளுயிர் எ-று இது காலத்தாற் பாலை.

   குறிப்பு. பொரியாரைக் கோங்கு - பொரிந்த அரையையுடைய
கோங்கினது. பொன் மருள் பசுவீ- பொன்னையொத்த பசுமையான
மலர்களை; மருள் : உவம உருபு. இணர் - பூங்கொத்து. வேங்கை
யொடு-வேங்கை மலரொடு. வேறுபட - பலதிறப்பட. மிலைச்சி - சூடி.
வேனிற்காலத்துக் கான்யாற்றின் கண்ணே. அன்னை: விளி.
இவளுயிர் வந்தோன் பேரொடு புணர்ந்தன்று.

    (பி-ம்) 1‘வேறுபட்டு? 2‘யிவள் கவினே? ( 7 )