எ-து வரைவு மறுத்துழி உடன்போய தலைமகள் இடைச்சுர கண்டாரை, ‘யான் போகின்ற படியை யாய்க்கு நீர் கூற
வேண்டும்’ எனச் சொல்லியது.
குறிப்பு. கடுங்கட்காளை - அஞ்சாமை பொருந்திய தலைவனோடு
கோள்வல் வேங்கை மலை- கொள்ளுதலில் வல்ல வேங்கைப் புலி
களையுடைய மலை. பிறக்கு-பின் ஆறுசெல் மாக்கள்-வழியிற் செல்
கின்ற மக்களே; விளி. நல் தோளை நயந்து பாராட்டி. எற்கெடுத்து-
வரைவு மறுத்து என்னைக் கெடுத்து, அறனில் யாய்க்கு-மறம் மிக்க
தாய்க்கு; குறுந். 224 : 6. மாக்கள், யாய்க்குச் சுரம் இறந்தனளெனக்
கூறுமின்.
(மேற்.) மு. இடைச்சுரத்து ஆயத்தார்க்குச் சொல்லிவிட்டது
(தொல். அகத். 45, இளம்.); தலைவி யான தேரேறி வருத்தமின்றிப்
போகின்றமை யாய்க்கு உரைமின் என்றது; உடன்போக்கில் தேர்
ஏறிப் போதலுண்டு (தொல். அகத். 42. பொருள். 18. ந.); நம்பி.
வரைவு. 28.
(பி-ம்) 1‘வேங்கைய’ 2‘வேரன் மலருஞ் சுரமிறந் தனளென’ ( 5 )