396

4 பாலை

(40) மறுதரவுப் பத்து


396. 1புலிப்பொறி வேங்கைப் பொன்னிணர் கொய்து
    நின் கதுப்பய லணியு மளவை பைபயச்
    சுரத்திடை யயர்ச்சியை யாறுக மடந்தை
    கல்கெழு சிறப்பி னம்மூர்
    எல்விருந் தாகிப்புகுக நாமே.

இதுவுமது.

   குறிப்பு. புலிப்பொறி வேங்கைப் பொன்இணர் -புலியின்
மேலுள்ள புள்ளிகள் போன்ற வேங்கை மரத்தினது பொன்னிற
மான பூங்கொத்து; வேங்கைப் பூவிற்குப் புலிப்பொறி : குறுந்.
47 : 1-2. குறிப்பு. கதுப்பு-கூந்தல். அணியும் அளவை - அணியும்
நேரம் வரை. சுரத்திடை அயர்ச்சியை - சுரத்தில் நடந்ததால்
உண்டான வருத்தத்தை. ஆறுகம்-ஆறுவோம். மடந்தை : விளி.
கல்-மலை. எவ்விருந்து -பகல் விருந்து. நாம் புகுகம்.

   (பி-ம்). 1‘புலிப்பொலி? ( 6 )