16

( 2 ) வேழப்பத்து


16. ஓங்குபூ வேழத்துத் துாம்புடைத் திரள்காற்
   சிறுதொழு மகளி ரஞ்சனம் பெய்யும்
   பூக்கஞ லுாரனை யுள்ளிப்
   பூப்போ லுண்கண் பொன்போர்த் தனவே.

  எ-து வாயிலாய்ப் புகுந்தார்க்குத் தோழி, ‘அவன் வரவையே
நினைத்து இவள் கண்ணும் பசந்தன; இனி அவன் வந்து பெறுவது
என்னை?? எனச் சொல்லி வாயில்மறுத்தது.

  (ப-ரை.) ‘ஓங்குபூ..... லுாரன்? என்றது இழிந்தார்க்குப் பயன்படு
மூரன் எ-று.

குறிப்பு. துாம்புடைத் திரள்கால்-உட்டுளையையுடைய திரண்ட
தண்டில்; ‘துாம்புடைவேழம்? (ஐங். 20 : 3). சிறுதொழு மகளிர்-சிறிய
தொழில் செய்யும் மகளிர். அஞ்சனம்-மையை. பெய்யும்-பெய்
துவைக்கும் பூக்கஞலுாரன்: ஐங். 3 : 8, குறிப்பு: பூப்போல் உண்
கண்-தாமரை மலரைப் போன்ற மையுண்ட கண்; ஐங். 101 : 4;
முல்லை 23; நற். 20 : 6; குறுந். 101 : 4. பொன் போர்த்தன-பசலையுற்
றன; பசலையாவது பிரிவாற்றாமையால் கண் முதலியவற்றில் உண்டாவதொரு
நிறவேறுபாடு. கண் பசத்தல்: ஐங். 21 : 4, 34 : 4, 36 : 4-5, 37 : 2, 45 :
4, 169 : 5, 170 : 4, 264 : 4, 477 : 1, 500 : 1 ; குறுந். 13 : 5, கண் பொன்
போல் பசத்தல்; ?உண்கட்கு மெல்லாம், பெரும்பொன் னுண்டு?, ?பொன்னெனப்
பசந்த கண்? (கலித். 64 : 21-2, 77: 12)

(மேற்.) அடி, 4,?துன்பு பசப்பூருங் கண்ணிழ றன்னைத், திருமல
ரெடுத்துக் கொன்றை காட்ட? (கல், 21, மயிலேறு.).                         ( 6 )