19

( 2 ) வேழப்பத்து


19. எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்1சினை
   புணர்ந்தோர் மெய்ம்மணங் கமழுந் தண்பொழில்
   வேழ வெண்பூ வெள்ளுளை 2சீக்கும்
   ஊர னாகலிற் கலங்கி
   மாரி மலரிற் கண்பனி யுகுமே.

  எ-து ‘பன்னாள் அவன் 3சேணிடைப்பிரியவும் ஆற்றியுளையாகிய
நீ சின்னாள் அவன் புறத்தொழுகுகின்ற இதற்கு ஆற்றாயாகின்றது
என்னை?? என்ற தோழிக்கு ‘எதிர்ப்பாடின்றி ஓருர்க் கண்ணே உறை
கையினாலே ஆற்றேனாகின்றேன்? எனத் தலைமகள் சொல்லியது.
வாயிலாய்ப் புகுந்தார் கேட்டு நெருங்காது மாறுதல் கருத்து.

 (ப-ரை.) மாங்கொம்பு பூத்து வதுவைமகளிர் மெய்ம்மணம் கம
ழக் கடவ பொழிலை அம்மலர் அரும்பாகிய பருவத்தே வேழங்களின்
பூத்துடைக்கும் ஊரன் என்றது சேணிடைப் பிரிந்துவந்து தன்னுட
னாய் நிகழ்கின்ற பருவத்து இன்பங்கள் நுகராமல் இடையே விலகு
கின்ற பரத்தையர்களை யுடையான். எ-று.

குறிப்பு. எக்கர் மாஅத்து-மணல்மேட்டிலுள்ள மாமரத்தினது.
பூம்பெருஞ்சினை-பூவினது பெரியஅரும்பு. புணர்ந்தோர் மெய்ம்மணம்
கமழும்-தலைவரைப் புணர்ந்த மகளிரது மெய்யின்மணம் போலக்கமழ்கின்ற;
?பொறிகிள ராகம் புல்லத் தோள்சேர், பறுகாற் பறவை யளவில மொய்த்தலிற்,
கண்கோ ளாக நோக்கிப் பண்படும், இனையை யோவென வினவினள் யாயே?
(நற். 55 : 4-7); சீவக. 853. பூவாகிய உளை; பூவிலுள்ள வெள்ளிய துய் எனலுமாம்.
சீக்கும்-துடைக்கும் பொழிலரும்பை உளை சீக்கும். மாரி மலரின்-மழையிற்பட்ட
மலரைப் போல. கண்பனி உகும்-கண்ணீர்த்துளி விழும்.

(பி-ம்.) 1‘சினைப்புணர்ந்தோர்? 2‘சீய்க்கும்? 3‘சேயிடைப்?            ( 9 )