284

3. குறிஞ்சி

(29) கிள்ளைப் பத்து


284. அளிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி
    குன்றக் குறவர் கொய்தினைப் பைங்கால்
    இருவி நீள்புனங் கண்டும்
    1பிரித றேற்றாப் பேரன் பினவே.

   எ-து தினையரிந்துழிக் கிளியை நோக்கிக் கூறுவாள்போற்
சிறைப்புறமாக ஓம்படுத்தது.

   குறிப்பு. பைங்கால்-பசுமையான தாள்; இது தினைகொய்யா
முன்னம் இருந்த நிலை. இருவி-அறுத்த பின்பு உள்ள தாள். புனத்
தைக் கண்டும். பிரிதல் தேற்றா-பிரிந்து செல்ல விரும்பாத. பைங்கிளி
பிரிதல் தேற்றாப் பேரன்பின, அதனால் அளிய.

  (மேற்) மு. தினையரிந்துழிக் கிளியை நோக்கி கூறுவாள்போல்
சிறைப்புறமாகத் தோழி ஓம்படுத்தது. (தொல். களவு. 23, ந.), இறை
மகளாடிடம் நோக்கி அழிதல் (நம்பி. களவு 40.).

  (பி-ம்.) 1 ‘பிரிதறோற்றா? ( 4 )