285

3. குறிஞ்சி

(29) கிள்ளைப் பத்து


285. பின்னிருங் கூந்த னன்னுதற் குறமகள்
    மென்றினை 1நுவணை யுண்டு தட்டையின்
    ஐவனச் சிறுகிளி கடியு நாட
    2வீங்குவளை நெகிழப் பிரிதல்
    யாங்கு 3வல்லுநையோ வீங்கிவட் டுறந்தே.

   எ-து ஒருவழித் தணந்துவந்த தலைமகற்குத் தோழி கூறியது

   (ப-ரை.) குறமகள் தினைப்பிண்டியையுண்டு ஐவனச்சிறுகிளி
கடியும் நாடவென்றது நின்னோடு இக்காலத்து இன்பநுகர்ந்து பின்பு
நின்மனைச் செல்வமும் பிறமகளிரொழியத் தானே நுகரும் வேட்கை
யுடையாளைப் பிரிந்து ஒழுகுகின்றாயென்பதாம்.

  குறிப்பு. பின்னிருங்கூந்தல்-பின்னிய கரிய கூந்தல், மென்
தினை நுவணை-மெல்லிய தினைமாவை : மலைபடு. 445; பதிற்.
30 : 24. தட்டை-கிளி முதலியவற்றை ஓட்டும் கருவி; மதுரைக். 305;
குறுந். 223 : 4. ஐவனம -மலைநெல் ஐவனத்திற்காக வருகின்ற சிறிய
கிளிகள். தட்டையாற் கிளி கடிதல் : “தண்டையி னினக்கிளி கடி
வோள்’ (நன். 154. மயிலை. (மேற்).) வீங்குதல்-செறிதல்; கலித்.
139 : 12, ந,: குறுந். 358 : 1. யாங்கு வல்லுநையோ - எவ்விதம்
வல்லமையுடையாய். நாட, இவளைத்துறந்து பிரிதலில் யாங்கு
வல்லுநையோ ? (பி-ம்.) 1 ‘நுவனை’ 2 ‘விலங்குவளை’ 3 ‘வல்லி
னையோ’ ( 5 )