எ-து இன்னநாளில் வரைவலெனக்கூறி அந்நாளில் வரை
யாது பின் அவ்வாறுகூறும் தலைமகற்குத் தோழி கூறியது.
(ப-ரை.) தமக்கு ஓரிடையூறும் செய்யாத நெடுவரைக்கண்ணே
வாழும் வருடையைத் தினைமேய்கின்ற கிள்ளை வெரூஉம் நாட
வென்றது நீசொன்ன போழ்தே எம் சுற்றத்தார் வரைவிற்கு இடை
யூறு செய்யாரென்பதறியாது வெருவுகின்றாய் என்பதாம்.
குறிப்பு. நெடுவரை மிசையது-பெரிய மலையிடத்திலுள்ள.
வருடையைக் கண்டுகிள்ளை வெரூஉம்; வருடை-ஒரு வகைமான்;
மலைபடு. 502-3; குறுந். 187 : 1. கிள்ளை-கிளி. வெரூஉம்-அஞ்
சும், வல்லை-திறமையையுடைய. நீ பொய்த்தல் வல்லை; அல்லது
செயலில் வல்லாய்.
(மேற்) மு. தோழி தலைவனைப் பழித்தது (தொல். களவு, 24,
இளம்.; 23, ந.) (பி-ம்.) 1 ‘வல்லைமன்றம்ம’ 2‘மல்லநீ’ ( 7 )