346

4 பாலை

(35) இளவேனிற் பத்து


346. அவரோ வாரார் தான்வந் தன்றே
    அஞ்சினைப் பாதிரி 1யலர்ந்தெனச்
    செங்க ணிருங்குயி லறையும் பொழுதே.

    குறிப்பு. பாதிரி-பாதிரிமலர் அலர்ந்தென - அலர்ந்ததென்று.
செங்கண் இருங்குயில் : அகநா. 229 : 19 ; பெருங் 3,6:10-11.
அறையும் - கூவும்.

  (பி-ம்) 1 ‘யலர்த்தெனச்? ( 6 )