124


(13) கிழவற்குரைத்த பத்து


124. கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே
   வண்டற் பாவை வௌவலின்
   1நுண்பொடி யளைஇக் கடறூர்ப் போளே.

  குறிப்பு. வண்டற்பாவை-விளையாட்டிற்குரிய பாவை; நற்,
191 : 3. வௌவலின்-கைக்கொள்ளலின். பாவையைக் கடல்
வௌவல் : ஐங் 125. நுண்பொடி-நுண்ணிய மணலை, அளைஇ-
கலந்து. கடலைத் தூா்ப்போள். மணலால் கடலைத் தூர்த்தல் :
?மணல்முகந்து ......... கடறூர்க்கும்? (சிலப். 7 : 30).

   (பி-ம்.) 1 ‘நுணபொவடியவள கடல்?    ( 4 )