369

4 பாலை

(37) முன்னிலைப் பத்து


369. வளமலர் ததைந்த வண்டுபடு 1நறும்பொழில்
    முளைநிரை முறுவ லொருத்தியொடு 1நெருநற்
    குறிநீ செய்தனை யென்ப வலரே
    குரவ நீள்சினை 2யுறையும்
    பருவ மாக்குயிற் கௌவையிற் பெரிதே.

     எ-து பரத்தையொருத்தியுடன் பொழிலகத்துத் தங்கிவந்த
தலைமகன் தலைமகள் வினாயவழி, ‘யாரையும் அறியேன்’ என்றானாக
அவள் கூறியது.

   (ப-ரை) இது பாலைக்குரித்தாகிய வேனிற்கண் நிகழும் குரவும்
குயிலும் கூறுதலாற் பாலையாயிற்று.

   குறிப்பு. ததைந்த - நெருங்கிய. முளைநிரை முறுவல்-முளையை
யொத்த நிரையினையுடைய புன் சிரிப்பு; கலித் 15 : 25. நெருநல்-
நேற்று குரவ நீள்சினை - குரவமரத்தினது நீண்ட கிளையின் கண்
கௌவையின்-ஒலியினும் அலர் குயிலினது கௌவையினும்
பெரிது.

   ஊடல் மருத உரிப்பொருளாதலின் பாலையில் சேர்த்ததற்குக்
காரணம் கூறினார்.

  (மேற்) மு. இஃது ஊடற் பொருண்மைத்தேனும் வேனிற்
காலத்து நிகழும் குயிற் குரலை உவமித்தலிற் பாலைத்திணையாயிற்று
(தொல். அகத். 52. இளம்.) இது பாலைக்கண் மருதம் நிகழ்ந்தது.
(தொல் அகத். 12, ந,) நம்பி. ஒழிபு. 42. (பி-ம்) 1‘நெருநை’
2‘யறையும்’ ( 9 )