எ-து தலைமகள் உடன்போயவழி அவள் தோழியாற்றாமை
கண்ட நற்றாய் சொல்லியது.
குறி்ப்பு. செல்லிய முயலி-செல்லுதற்கு முயன்று:முயலி என்
பது ‘இயலி? (பெரும்பாண். 331) என்பது போல. பாய - பரவிய.
சிறகர்-சிறகு. வாவல் உவக்கும் மாலை - வௌவால் உயரப் பறந்து
செல்லும் மாலையின் கண்; ஐங். 339 : 3, குறிப்பு. அவட்கு என்றது
தலைவியைச் சுட்டியது. நோவேன்- வருந்தேன்.கலிழும்-கலங்கும்.
துணையிலளாய்க்கலிழுகின்ற. இவட்கு - தலைவியினுடைய தோழிக்கு.
(மேற்) மு. தோழியது ஆற்றாமை கண்டுழி நற்றாய் கூறியது
(தொல். அகத். 36, ந.) தோழி அழுங்கல் கண்டு நற்றாய் புலம்பல்
(நம்பி. வரைவு. 15)
(பி-ம்) 1‘முயலின்? 2‘லுவக்கு? ( 9 )