78
(8) புனலாட்டுப் பத்து

 


78. கதிரிலை நெடுவேற் 1கடுமான் கிள்ளி
  மதில்கொல் யானையிற் 2கதழ்புநெறி வந்த
  சிறையழி புதுப்புன லாடுகம்
  எம்மொடு கொண்மோவெந் தோள்புரை புணையே.
இதுவுமது.

 குறிப்பு. கதிர்-ஒளி. கடுமான்-வேகம் மிக்க குதிரையையுடைய.
கிள்ளி-சோழனது. யானையின்-யானையைப்போல. புதுப்புனலுக்கு
யானை ; சீவக. 41 ; திருவிளை. வையையழைத்த. 78. கதழ்பு-
விரைந்து. தோள்புரை புணை-தோளை யொத்த தெப்பம் ; குறுந்.
168 : 5, எம்மொடு புணை கொண்மோ, புனல் ஆடுகம். இனித்
தலைவியோடு புணைகொள்ளலாகாது என்பது கருத்து.

   (மேற்.) மு. ‘காமக்கிழத்தி நின் மனைவியோடன்றி எம்மொடு
புணை கொள்ளின் யாமாடுதுமென்று புனலாட்டிற்கு இயைந்தாள்
போல மறுத்தது? (தொல். கற்பு, 50. ந.)

  (பி-ம்) 1 ?கதிமான் கிள்ளி? 2 ‘கதவுநெரி தந்த? ( 8 )