(13) கிழவற்குரைத்த பத்து
128. கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே 1உறாஅ வறுமுலை மடாஅ உண்ணாப் 2பாவையை யூட்டு வோளே.
குறிப்பு. உறா-தோன்றாத மடாஅ-மடுத்து. உண்ணாப் பாவை என்றது மண்ணாற் செய்த பாவையை. உண்ணாப் பாவையை முலையூட்டுவோள்.
(மேற்.) மு. திணை மயக்குறுதலுள் நெய்தற்கண் மருதம் (தொல். அகத். 12, ந.).
(பி-ம்.) 1 ‘ஊறா வறுமுலை மடூஉ? 2 ‘பாவை யூட்டு? ( 8 )