369 | | வள மலர் ததைந்த வண்டு படு நறும் பொழில் | | முளை நிரை முறுவல் ஒருத்தியொடு, நெருநல் | | குறி நீ செய்தனை என்ப; அலரே, | | குரவ நீள் சினை உறையும் | 5 | பருவ மாக் குயில் கௌவையின், பெரிதே! | |
| பரத்தை ஒருத்தியுடன் பொழிலகத்துத் தங்கி வந்த தலைமகன் தலைமகள் வினாயவழி, 'யாரையும் அறியேன்' என்றானாக, அவள் கூறியது. 9 | | |