தொடக்கம்   முகப்பு
செவிலித்தாய்
380
அத்த நீள் இடை அவனொடு போகிய
முத்து ஏர் வெண் பல் முகிழ் நகை மடவரல்
தாயர் என்னும் பெயரே வல்லாறு
எடுத்தேன் மன்ற, யானே;
5
கொடுத்தோர் மன்ற, அவள் ஆயத்தோரே.
தலைமகள் உடன்போகியவழித் தெருட்டுவார்க்குச் செவிலித்தாய் சொல்லியது. 10
 

 
389
'செய் வினைப் பொலிந்த செறி கழல் நோன் தாள்
மை அணல் காளையொடு பைய இயலி,
பாவை அன்ன என் ஆய்தொடி மடந்தை
சென்றனள்! என்றிர், ஐய!
5
ஒன்றினவோ, அவள் அம் சிலம்பு அடியே!
பின்சென்ற செவிலித்தாய், வினவப் பட்டோர் 'கண்டோம்' என்புழி, சொல்லியது. 9
 

 
400
மள்ளர் அன்ன மரவம் தழீஇ,
மகளிர் அன்ன ஆடுகொடி நுடங்கும்
அரும் பதம் கொண்ட பெரும் பத வேனில்,
'காதல் புணர்ந்தனள் ஆகி, ஆய் கழல்
5
வெஞ் சின விறல் வேல் காளையொடு
இன்று புகுதரும்' என வந்தன்று, தூதே.
உடன்போய் வதுவை அயரப்பட்ட தலைவி, 'தலைவனோடு இன்று வரும்' எனக் கேட்ட செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது. 10
 

 
401
மறி இடைப்படுத்த மான் பிணை போல,
புதல்வன் நடுவணன் ஆக, நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை; முனிவு இன்றி
நீல் நிற வியலகம் கவைஇய
5
ஈனும், உம்பரும், பெறலருங்குரைத்தே.
கடிமனைச் சென்றுவந்த செவிலி உவந்த உள்ளத்தளாய் நற்றாய்க்குச் சொல்லியது.
 

 
402
புதல்வற் கவைஇய தாய் புறம் முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை, பாணர்
நரம்பு உளர் முரற்கை போல,
இனிதால்; அம்ம! பண்புமார் உடைத்தே. 2
 

 
403
புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும்
அமர்ந்த உள்ளம் பெரிது ஆகின்றே
அகன் பெருஞ் சிறப்பின் தந்தை பெயரன்
முறுவலின் இன் நகை பயிற்றி,
சிறு தேர் உருட்டும் தளர்நடை கண்டே. 3
 

 
404
வாள் நுதல் அரிவை மகன் முலை ஊட்ட,
தான் அவள் சிறுபுறம் கவையினன் நன்றும்
நறும் பூந் தண் புறவு அணிந்த,
குறும் பல் பொறைய நாடுகிழவோனே. 4
 

 
405
ஒண் சுடர்ப் பாண்டில் செஞ் சுடர் போல,
மனைக்கு விளக்கு ஆயினள் மன்ற கனைப் பெயல்
பூப் பல அணிந்த வைப்பின்
புறவு அணி நாடன் புதல்வன் தாயே. 5
 

 
406
மாதர் உண்கண் மகன் விளையாட,
காதலித் தழீஇ இனிது இருந்தனனே
தாது ஆர் பிரசம் ஊதும்
போது ஆர் புறவின் நாடு கிழவோனே. 6
 

 
407
நயந்த காதலித் தழீஇ, பாணர்
நயம் படு முரற்கையின் யாத்த பயன் தெரிந்து,
இன்புறு புணர்ச்சி நுகரும்
மென் புல வைப்பின் நாடு கிழவோனே. 7
 

 
408
பாணர் முல்லை பாட, சுடர் இழை
வாள் நுதல் அரிவை முல்லை மலைய,
இனிது இருந்தனனே, நெடுந்தகை
துனி தீர் கொள்கைத் தன் புதல்வனொடு பொலிந்தே. 8
 

 
72
வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழைத்
திதலை அல்குல், துயல்வரும் கூந்தல்,
குவளை உண்கண், ஏஎர் மெல்லியல்
மலர் ஆர் மலிர்நிறை வந்தென,
5
புனல் ஆடு புணர்துணை ஆயினள், எமக்கே.
தலைமகள் புலவி நீக்கித் தன்னோடு புதுப் புனல் ஆட வேண்டிய தலைமகன் களவுக் காலத்துப் புனலாட்டு நிகழ்ந்ததனை அவள் கேட்பத் தோழிக்குச் சொல்லியது. 2

 
410
மாலை முன்றில் குறுங்கால் கட்டில்
மனையோள் துணைவி ஆக, புதல்வன்
மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப்
பொழுதிற்கு ஒத்தன்று மன்னே.
5
மென் பிணித்து அம்ம பாணனது யாழே!
கடிமனைச் சென்ற செவிலி, தலைமகனும் தலைமகளும் புதல்வனொடு பாடல் கேட்டிருந்தமை கண்டு, தன்னுள்ளே உவந்து சொல்லியது. 10
 

 
மேல்