| 435 | | நன்றே, காதலர் சென்ற ஆறே! | | நிலன் அணி நெய்தல் மலர, | |
| | பொலன் அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே. 5 | |
| 436 | | நன்றே, காதலர் சென்ற ஆறே! | | நன் பொன் அன்ன சுடர் இணர்க் | |
| | கொன்றையொடு மலர்ந்த குருந்துமார் உடைத்தே. 6 | | |
| 437 | | நன்றே, காதலர் சென்ற ஆறே! | | ஆலித் தண் மழை தலைஇய, | |
| | வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தே. 7 | | |
| 438 | | நன்றே, காதலர் சென்ற ஆறே! | | பைம் புதல் பல் பூ மலர, | |
| | இன்புறத் தகுந பண்புமார் உடைத்தே. 8 | | |
| 439 | | நன்றே, காதலர் சென்ற ஆறே! | | குருந்தங் கண்ணிக் கோவலர் | |
| | பெருந் தண் நிலைய பாக்கமும் உடைத்தே. 9 | | |
| 440 | | நன்றே, காதலர் சென்ற ஆறே! | | தண் பெயல் அளித்த பொழுதின் | |
| | ஒண் சுடர்த் தோன்றியும் தளவமும் உடைத்தே. 10 | | |
| 461 | | வான் பிசிர்க் கருவியின் பிடவு முகை தகைய, | | கான் பிசிர் கற்ப, கார் தொடங்கின்றே; | | இனையல் வாழி, தோழி; எனையதூஉம் | | நிற் துறந்து அமைகுவர்அல்லர், | 5 | வெற்றி வேந்தன் பாசறையோரே. | |
| | பிரிவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி வரவு கூறி, ' த்த பருவம் வந்ததாகலான், அவர் வருவர்; என வற்புறீஇயது. 1 | | |
| 462 | | ஏதில பெய்ம் மழை கார் என மயங்கிய | | பேதைஅம் கொன்றைக் கோதை நிலை நோக்கி, | | எவன் இனி, மடந்தை! நின் கலிழ்வே? நின்வயின் | | தகை எழில் வாட்டுநர் அல்லர், | 5 | முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே. | |
| | பருவங் கண்டு வேறுபட்ட கிழத்தியைத் தோழி, 'பருவம் அன்று' என வற்புறீஇயது. 2 | | |
| 463 | | புதல்மிசை நறு மலர் கவின் பெறத் தொடரி, நின் | | நலம் மிகு கூந்தல் தகை கொளப் புனைய | | வாராது அமையலோ இலரே; நேரார் | | நாடு படு நன்கலம் தரீஇயர், | 5 | நீடினர் தோழி! நம் காதலோரே. | |
| | குறித்த பருவம் வரவும் தலைமகன் தாழ்த்துழி, தோழி காரணம் கூறி, வற்புறீஇயது. 3 | | |
| 464 | | கண் எனக் கருவிளை மலர, பொன் என | | இவர் கொடிப் பீரம் இரும் புதல் மலரும் | | அற்சிரம் மறக்குநர் அல்லர் நின் | | நல் தோள் மருவரற்கு உலமருவோரே. | |
| | வரைந்த அணுமைக்கண்ணே பிரிந்த தலைமகன் குறித்த பருவம் வந்துழி, 'இதனை மறந்தார்' என்ற தலைமகட்குத் தோழி, 'வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாகலான் மறத்தல் கூடாது' எனச் சொல்லி வற்புறீஇயது. 4 | | |
| 465 | | நீர் இகுவன்ன நிமிர் பரி நெடுந் தேர், | | கார் செய் கானம் கவின் பட, கடைஇ, | | மயங்கு மலர் அகலம் நீ இனிது முயங்க, | | வருவர், வாழி, தோழி! | 5 | செரு வெங் குருசில் தணிந்தனன் பகையே. | |
| | பருவம் கண்டு வேறுபட்ட தலைமகளை, 'வேந்தன் வினைமுடித்தான்' எனக் கேட்ட தோழி, 'வருவர்' என வற்புறீஇயது. 5 | | |
| 466 | | வேந்து விடு விழுத் தொழில் எய்தி, ஏந்து கோட்டு | | அண்ணல் யானை அரசு விடுத்து, இனியே | | எண்ணிய நாளகம் வருதல் பெண் இயல் | | காமர் சுடர் நுதல் விளங்கும் | 5 | தே மொழி அரிவை! தெளிந்திசின் யானே. | |
| | பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளை, 'அவர் போன காரியம் இடையூறு இன்றி முடிந்து வருதல் பல்லாற்றானும் தெளிந்தேன்' எனத் தோழி சொல்லி ஆற்றுவித்தது. 6 | | |
| 467 | | புனை இழை நெகிழச் சாஅய், நொந்துநொந்து | | இனையல் வாழியோ இகுளை! 'வினைவயின் | | சென்றோர் நீடினர் பெரிது' என: தங்காது | | நம்மினும் விரையும் என்ப, | 5 | வெம் முரண் யானை விறல் போர் வேந்தே. | |
| | தலைமகன் வினைவயிற் பிரிய ஆற்றாள் ஆகிய தலைமகளைத் தோழி வற்புறீஇயது. 7 | | |
| 468 | | வரி நுணல் கறங்க, தேரை தெவிட்ட, | | கார் தொடங்கின்றே காலை; இனி, நின் | | நேர் இறைப் பணைத் தோட்கு ஆர் விருந்து ஆக, | | வடி மணி நெடுந் தேர் கடைஇ, | 5 | வருவர் இன்று, நம் காதலோரே. | |
| | பிரிவு நீட ஆற்றாள் ஆய தலைமகட்குத் தோழி பருவங்காட்டி, 'இன்றே வருவர்' என வற்புறீஇயது. 8 | | |
| 469 | | பைந் தினை உணங்கல் செம் பூழ் கவரும் | | வன்புல நாடன் தரீஇய, வலன் ஏர்பு | | அம் கண் இரு விசும்பு அதிர, ஏறொடு | | பெயல் தொடங்கின்றே வானம்; | 5 | காண்குவம்; வம்மோ, பூங் கணோயே! | |
| | பிரிவு நீட ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி 'அவரை நமக்குத் தருதற்கு வந்தது காண் இப் பருவம்' எனக் காட்டி வற்புறீஇயது. 9 | | |
| 470 | | இரு நிலம் குளிர்ப்ப வீசி, அல்கலும் | | அரும் பனி அளைஇய அற்சிரக் காலை | | உள்ளார், காதலர், ஆயின், ஒள்ளிழை! | | சிறப்பொடு விளங்கிய காட்சி | 5 | மறக்க விடுமோ, நின் மாமைக் கவினே? | |
| | பருவம் வந்தது கண்டு, 'தாம் குறித்த இதனை மறந்தார்' என வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. 10 | | |
| 471 | | எல் வளை நெகிழ, மேனி வாட, | | பல் இதழ் உண்கண் பனி அலைக் கலங்க, | | துறந்தோன் மன்ற, மறம் கெழு குருசில்; | | அது மற்று உணர்ந்தனை போலாய் | 5 | இன்னும் வருதி; என் அவர் தகவே? | |
| | பருவ வரவின்கண் தூதாகி வந்த பாணன் கூறிய வழி, தோழி சொல்லியது. 1 | | |
| 472 | | கை வல் சீறியாழ்ப் பாண! நுமரே | | செய்த பருவம் வந்து நின்றதுவே; | | எம்மின் உணரார்ஆயினும், தம்வயின் | | பொய் படு கிளவி நாணலும் | 5 | எய்யார் ஆகுதல், நோகோ யானே? | |
| | குறித்த பருவம் வரவும் தலைமகன் வாரானாகியவழி, தூதாய் வந்த பாணற்குத் தோழி கூறியது. 2 | | |
| 496 | | மா புதல் சேர, வரகு இணர் சிறப்ப | | மா மலை புலம்ப, கார் கலித்து அலைப்ப, | | பேர் அமர்க் கண்ணி! நிற் பிரிந்து உறைநர் | | தோள் துணையாக வந்தனர்; | 5 | போது அவிழ் கூந்தலும் பூ விரும்புகவே. | |
| | குறித்த பருவத்தின்கண் தலைமகன் வந்துழி, தோழி தலைமகட்குச் சொல்லியது. 6 | | |
| 497 | | குறும் பல் கோதை கொன்றை மலர, | | நெடுஞ் செம் புற்றம் ஈயல் பகர, | | மா பசி மறுப்ப, கார் தொடங்கின்றே | | பேர் இயல் அரிவை! நின் உள்ளிப் | 5 | போர் வெங் குருசில் வந்தமாறே. | |
|
| 498 | | தோள் கவின் எய்தின; தொடி நிலை நின்றன; | | நீள் வரி நெடுங் கண் வாள் வனப்பு உற்றன | | ஏந்து கோட்டு யானை வேந்து தொழில் விட்டென, | | விரை செலல் நெடுந் தேர் கடைஇ, | 5 | வரையக நாடன் வந்தமாறே. | |
|
| 499 | | பிடவம் மலர, தளவம் நனைய, | | கார் கவின் கொண்ட கானம் காணின், | | 'வருந்துவள் பெரிது' என, அருந் தொழிற்கு அகலாது, | | வந்தனரால், நம் காதலர் | 5 | அம் தீம் கிளவி! நின் ஆய் நலம் கொண்டே. | |
|
| 500 | | கொன்றைப் பூவின் பசந்த உண்கண், | | குன்றக நெடுஞ் சுனைக் குவளை போல, | | தொல் கவின் பெற்றன இவட்கே வெல் போர் | | வியல் நெடும் பாசறை நீடிய | 5 | வய மான் தோன்றல் நீ! வந்தமாறே. | |
|
|