தொடக்கம்   முகப்பு
பகல் போல் தோன்றும் அளவிற்கு ஒளி விளக்குகள்.
56
பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா,
வெல் போர்ச் சோழர், ஆமூர் அன்ன இவள்
நலம்பெறு சுடர் நுதல் தேம்ப,
எவன் பயம் செய்யும், நீ தேற்றிய மொழியே?
புறத்தொழுக்கம் உளதாகியது அறிந்து தலைமகள் மெலிந்துழி, 'அஃது இல்லை' என்று தேற்றும் தலைமகற்குத் தோழி சொல்லியது. 6

 
மேல்