475 | | தொடி நிலை கலங்க வாடிய தோளும் | | வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கி, | | பெரிது புலம்பினனே, சீறியாழ்ப் பாணன்; | | எம் வெங் காதலொடு பிரிந்தோர் | 5 | தம்மோன் போலான்; பேர் அன்பினனே. | |
| பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தலைமகனுழை நின்று வந்தார் கேட்ப, தன் மெலிவு கண்டு இரங்கிய பாணனைத் தோழிக்கு மகிழ்ந்து சொல்லியது. 5 | | |