54 | | திண் தேர்த் தென்னவன் நல் நாட்டு உள்ளதை | | வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும் | | தேனூர் அன்ன இவள் தெரிவளை நெகிழ, | | ஊரின் ஊரனை நீ தர, வந்த | 5 | பைஞ்சாய்க் கோதை மகளிர்க்கு | | அஞ்சுவல், அம்ம! அம் முறை வரினே. | |
| வாயில் வேண்டிவந்த தலைமகற்குத் தலைமகள் குறிப்பு அறிந்த தோழி, அவன் கொடுமை கூறி, வாயில் மறுத்தது. 4 | | |