செந்துறைப் பாடாண் பாட்டு 


null
உரை
 

12.வென்றிச் சிறப்பும் ஓலக்க வினோதச் சிறப்பும்

வயவர் வீழ வாள் அரில் மயக்கி,
இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப,
கடம்பு முதல் தடிந்த கடுஞ் சின வேந்தே!
தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர்
அரிமான் வழங்கும் சாரல், பிற மான்  
5
தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்தாங்கு,
முரசு முழங்கு நெடு நகர் அரசு துயிலீயாது,
மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல் புகழ்
கேட்டற்கு இனிது  நின் செல்வம்: கேட்டொறும்
காண்டல் விருப்பொடு   கமழும் குளவி;  
10
வாடாப் பைம் மயிர், இளைய ஆடு நடை,
அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும்
கன்று புணர் பிடிய; குன்று பல நீந்தி
வந்து அவண் இறுத்த இரும் பேர் ஒக்கல்
தொல் பசி உழந்த பழங்கண் வீழ,
15
எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங் குறை,
மை ஊன் பெய்த வெண்னெல் வெண் சோறு,
நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி;
நீர்ப் படு பருந்தின் இருஞ் சிறகு அன்ன,
நிலம் தின் சிதாஅர் களைந்த பின்றை,  
20
நூலாக் கலிங்கம் வால் அரைக் கொளீஇ;
வணர் இருங் கதுப்பின், வாங்கு அமை மென் தோள்,
வசை இல் மகளிர் வயங்குஇழை அணிய;
அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு
நுகர்தற்கு இனிது, நின் பெருங் கலி மகிழ்வே!  
25


துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:மறம் வீங்கு பல் புகழ்
உரை
 

13. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தல் சிறப்பும்

தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்,
ஏறு பொருத செறு உழாது வித்துநவும்,
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்
இருங் கண் எருமை நிரை தடுக்குநவும்,
கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின்  
5
வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும்,
ஒலி தெங்கின், இமிழ் மருதின்,
புனல் வாயில், பூம் பொய்கை,
பாடல் சான்ற பயம் கெழு வைப்பின்,
நாடு கவின் அழிய, நாமம் தோற்றி;   
10
கூற்று அடூஉ நின்ற யாக்கை போல,
நீ சிவந்து இறுத்த நீர்அழி பாக்கம்
விரி பூங் கரும்பின் கழனி புல்லென,
திரி காய் விடத்தரொடு கார் உடை போகி,
கவைத் தலைப் பேய் மகள் கழுது ஊர்ந்து இயங்க,
15
ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலை
தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து
உள்ளம் அழிய, ஊக்குநர், மிடல் தபுத்து,
உள்ளுநர் பனிக்கும் பாழ் ஆயினவே.
காடே கடவுள் மேன; புறவே   
20
ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன;
ஆறே அவ் அனைத்து: அன்றியும், ஞாலத்துக்
கூலம் பகர்நர் குடி புறந்தராஅ,
குடி புறந்தருநர் பாரம் ஓம்பி,
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது  
25
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப,
நோயொடு பசி இகந்து ஒரீஇ,
பூத்தன்று   பெரும! நீ காத்த நாடே!

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்:பூத்த நெய்தல்
உரை
 

14.மன்னனுடைய பல குணங்களையும் ஆற்றலையும்
   ஒருங்கு கூறி வாழ்த்துதல்

நிலம், நீர், வளி, விசும்பு, என்ற நான்கின்
அளப்பு அரியையே;
நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல்,
ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை;
போர் தலைமிகுத்த ஈர் ஐம்பதின்மரொடு  
5
துப்புத் துறைபோகிய, துணிவுடை ஆண்மை,
அக்குரன் அனைய கைவண்மையையே;
அமர் கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர், பீடு, அழித்த செருப் புகல் முன்ப!
கூற்று வெகுண்டு வரினும், மாற்றும் ஆற்றலையே;
10
எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து
நோன் புரித் தடக் கைச் சான்றோர் மெய்ம்மறை!
வான் உறை மகளிர், நலன், இகல் கொள்ளும்;
வயங்கு இழை கரந்த, வண்டு படு கதுப்பின்;
ஒடுங்கு ஈர் ஓதிக் கொடுங்குழை கணவ!  
15
பல் களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும்
படை ஏர் உழவ! பாடினி வேந்தே!
இலங்குமணி மிடைந்த பொலங் கலத் திகிரிக்
கடலக வரைப்பின் இப் பொழில் முழுது ஆண்ட நின்
முன் திணை முதல்வர் போல, நின்று நீ  
20
கெடாஅ நல் இசை நிலைஇத்
தவாஅலியரோ, இவ் உலகமோடு உடனே!

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு

வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு: செந்தூக்கு
பெயர்:சான்றோர் மெய்ம்மறை
உரை
 

15. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தல் சிறப்பும்

யாண்டு தலைப்பெயர, வேண்டு புலத்து இறுத்து,
முனை எரி பரப்பிய துன் அருஞ் சீற்றமொடு
மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கி,
நிரை களிறு ஒழுகிய நிரைய வெள்ளம்
பரந்து ஆடு கழங்கு அழி மன் மருங்கு அறுப்ப
            5

கொடி விடு குரூஉப் புகை பிசிர, கால் பொர,
அழல் கவர் மருங்கின் உரு அறக் கெடுத்து,
தொல் கவின் அழிந்த கண் அகன் வைப்பின்,
வெண் பூ வேளையொடு பைஞ் சுரை கலித்து,
பீர் இவர்பு பரந்த நீர் அறு நிறைமுதல்,
                  10

சிவந்த காந்தள் முதல் சிதை, மூதில்,
புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும்
புல் இலை வைப்பின், புலம் சிதை அரம்பின்,
அறியாமையான் மறந்து, துப்பு எதிர்ந்த நின்
பகைவர் நாடும் கண்டு வந்திசினே:
                      15

கடலவும், கல்லவும், யாற்றவும், பிறவும்,
வளம் பல நிகழ்தரு நனந் தலை நல் நாட்டு,
விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர்,
கொடி நிழல் பட்ட பொன்னுடை நியமத்து,
சீர் பெறு கலி மகிழ் இயம்பும் முரசின்
                   20

வயவர் வேந்தே! பரிசிலர் வெறுக்கை!
தார் அணிந்து எழிலிய, தொடி சிதை மருப்பின்,
போர் வல் யானைச் சேரலாத!
'நீ வாழியர், இவ் உலகத்தோர்க்கு' என,
உண்டு உரை மாறிய, மழலை நாவின்,
                   25

மென் சொல் கலப்பையர் திருந்து தொடை வாழ்த்த,
வெய்துறவு அறியாது நந்திய வாழ்க்கை,
செய்த மேவல் அமர்ந்த சுற்றமோடு,
ஒன்றுமொழிந்து அடங்கிய கொள்கை, என்றும்
பதி பிழைப்பு அறியாது, துய்த்தல் எய்தி,
                 30

நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
மேயினர் உறையும், பலர் புகழ் பண்பின்,
நீ புறந்தருதலின் நோய் இகந்து ஒரீஇய
யாணர் நல் நாடும் கண்டு, மதி மருண்டனென்
மண்ணுடை ஞாலத்து மன் உயிர்க்கு எஞ்சாது
             35

ஈத்துக் கை தண்டாக் கை கடுந் துப்பின்,
புரைவயின் புரைவயின் பெரிய நல்கி,
ஏமம் ஆகிய, சீர் கெழு விழவின்,
நெடியோன் அன்ன நல் இசை,
ஒடியா மைந்த! நின் பண்பு பல நயந்தே.
                 40

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:நிரைய வெள்ளம்

உரை
 

16.அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த
   இன்பச் சிறப்பும்

கோடு உறழ்ந்து எடுத்த கொடுங் கண் இஞ்சி,
நாடு கண்டன்ன கணை துஞ்சு விலங்கல்,
துஞ்சுமரக் குழாஅம் துவன்றி, புனிற்று மகள்
பூணா ஐயவி தூக்கிய மதில
நல் எழில் நெடும் புதவு முருக்கிக் கொல்லுபு,
5
ஏனம் ஆகிய நுனை முரி மருப்பின்,
கடாஅம் வார்ந்து, கடுஞ் சினம் பொத்தி,
மரம் கொல் மழ களிறு வழங்கும் பாசறை,
நீடினை ஆகலின், காண்கு வந்திசினே:
ஆறிய கற்பின், அடங்கிய சாயல்,  
10
ஊடினும் இனிய கூறும் இன் நகை,
அமிர்து பொதி துவர் வாய், அமர்த்த நோக்கின்,
சுடர் நுதல், அசைநடை உள்ளலும் உரியள்;
பாயல் உய்யுமோ   தோன்றல்! தா இன்று
திரு மணி பொருத திகழ் விடு பசும் பொன்
15
வயங்கு கதிர் வயிரமோடு உறழ்ந்து, பூண் சுடர்வர,
எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து,
புரையோர் உண்கண் துயில் இன் பாயல்
பாலும், கொளாலும் வல்லோய்! நின்
சாயல் மார்பு நனி அலைத்தன்றே?
20

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு
பெயர்: துயிலின் பாயல் 
உரை
 

17.பொறையுடைமையோடு படுத்து மன்னனின்
   வென்றிச் சிறப்புக் கூறுதல்

புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே
பெரிய தப்புநர் ஆயினும், பகைவர்
பணிந்து திறை பகரக் கொள்ளுநை ஆதலின்
துளங்கு பிசிர் உடைய, மாக் கடல் நீக்கி,
கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை,
5
ஆடுநர் பெயர்ந்து வந்து, அரும் பலி தூஉய்,
கடிப்புக் கண் உறூஉம் தொடித் தோள் இயவர்,
'அரணம் காணாது, மாதிரம் துழைஇய
நனந் தலைப் பைஞ் ஞிலம் வருக, இந் நிழல்' என,
ஞாயிறு புகன்ற, தீது தீர் சிறப்பின்,
10
அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇ,
கடுங் கால் கொட்கும் நன் பெரும் பரப்பின்,
விசும்பு தோய் வெண்குடை நுவலும்
பசும் பூண் மார்ப! பாடினி வேந்தே!

துறை:
செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம
தூக்கு:
செந்தூக்கு
பெயர்:வலம்படு வியன் பணை
உரை
 

null
உரை
 

27.வென்றிச் சிறப்பு

சிதைந்தது மன்ற, நீ சிவந்தனை நோக்கலின்
தொடர்ந்த குவளைத் தூ நெறி அடைச்சி,
அலர்ந்த ஆம்பல் அக மடிவையர்,
சுரியல்அம் சென்னிப் பூஞ் செய் கண்ணி
அரியல் ஆர்கையர், இனிது கூடு இயவர்,
5
துறை நணி மருதம் ஏறி, தெறுமார்,
எல் வளை மகளிர் தெள் விளி இசைப்பின்,
பழனக் காவில் பசு மயில் ஆலும்;
பொய்கை வாயில் புனல் பொரு புதவின்,
நெய்தல் மரபின், நிரை கள், செறுவின்
10
வல் வாய் உருளி கதுமென மண்ட,
அள்ளல் பட்டு, துள்ளுபு துரப்ப,
நல் எருது முயலும் அளறு போகு விழுமத்துச்
சாகாட்டாளர் கம்பலை அல்லது,
பூசல் அறியா நல் நாட்டு
15
யாணர் அறாஅக் காமரு கவினே!

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:தொடர்ந்த குவளை
உரை
 

31.மன்னற்கு உரிய மாட்சிமையெல்லாம் எடுத்து
   ஒருங்கே புகழ்தல்

குன்று தலைமணந்து, குழூஉக் கடல் உடுத்த
மண் கெழு ஞாலத்து, மாந்தர் ஒராங்குக்
கை சுமந்து அலறும் பூசல், மாதிரத்து
நால் வேறு நனந் தலை, ஒருங்கு எழுந்து ஒலிப்ப,
தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென,
5
உண்ணாப் பைஞ்ஞிலம் பனித் துறை மண்ணி,
வண்டு ஊது பொலி தார், திரு ஞெமர் அகலத்து,
கண் பொரு திகிரி, கமழ் குரல் துழாஅய்
அலங்கல், செல்வன் சேவடி பரவி,
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதிப் பெயர 
10
மணி நிற மை இருள் அகல, நிலா விரிபு,
கோடு கூடு மதியம் இயலுற்றாங்கு,
துளங்கு குடி விழுத் திணை திருத்தி, முரசு கொண்டு,
ஆண் கடன் இறுத்த நின் பூண் கிளர் வியல் மார்பு,
கருவி வானம் தண் தளி தலைஇய,   
15
வட தெற்கு விலங்கி, விலகு தலைத்து எழிலிய,
பனி வார் விண்டு விறல் வரையற்றே;
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த
தூங்கு எயில் கதவம் காவல் கொண்ட
எழூஉ நிவந்தன்ன, பரேர் எறுழ் முழவுத் தோள்;
20
வெண் திரை முந்நீர் வளைஇய உலகத்து,
வண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து
வண்டன் அனையைமன் நீயே; வண்டு பட
ஒலிந்த கூந்தல், அறம் சால் கற்பின்,
குழைக்கு விளக்கு ஆகிய ஒள் நுதல், பொன்னின்
25
இழைக்கு விளக்கு ஆகிய அவ் வாங்கு உந்தி,
விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த
செம்மீன் அனையள், நின் தொல் நகர்ச் செல்வி;
நிலன் அதிர்பு இரங்கல ஆகி, வலன் ஏர்பு,
வியன் பணை முழங்கும் வேல் மூசு அழுவத்து,
30
அடங்கிய புடையல், பொலங் கழல் நோன் தாள்,
ஒடுங்காத் தெவ்வர் ஊக்கு அறக் கடைஇ,
புறக்கொடை எறியார், நின் மறப் படை கொள்ளுநர்;
நகைவர்க்கு அரணம் ஆகி, பகைவர்க்குச்
சூர் நிகழ்ந்தற்று, நின் தானை;
35
போர் மிகு குருசில்! நீ மாண்டனை பலவே.

துறை:செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:கமழ் குரல் துழாய்
உரை
 

32.மன்னனின் பல குணங்களையும் உடன் எண்ணி,
   அவற்றுள் பொறையுடைமையை மிகுத்துப் புகழ்தல்

மாண்டனை பலவே, போர் மிகு குருசில்! நீ
மாதிரம் விளக்கும் சால்பும், செம்மையும்;
முத்துடை மருப்பின் மழ களிறு பிளிற,
மிக்கு எழு கடுந் தார் துய்த்தலைச் சென்று,
துப்புத் துவர் போக, பெருங் கிளை உவப்ப,
5
ஈத்து ஆன்று ஆனா இடனுடை வளனும்;
துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும்;
எல்லாம் எண்ணின், இடு கழங்கு தபுந.
கொன் ஒன்று மருண்டனென், அடு போர்க் கொற்றவ!
நெடுமிடல் சாய, கொடு மிடல் துமிய,
10
பெரு மலை யானையொடு புலம் கெட இறுத்து,
தடந் தாள் நாரை படிந்து இரை கவரும்,
முடந்தை நெல்லின் கழை அமல், கழனி,
பிழையா விளையுள் நாடு அகப்படுத்து,
வையா மாலையர் வசையுநர்க் கறுத்த  
15
பகைவர் தேஎத்து ஆயினும்
சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே!

துறை:செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு

பெயர்:கழை அமல் கழனி  
உரை
 

37.மன்னன் குணங்களைப் புகழ்ந்து, அவனையும் அவன்
   செல்வத்தையும் வாழ்த்துதல்

வாழ்க, நின் வளனே நின்னுடை வாழ்க்கை,
வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த!
பகைவர் ஆரப் பழங்கண் அருளி,
நகைவர் ஆர நன் கலம் சிதறி,
ஆன்று, அவிந்து, அடங்கிய, செயிர் தீர், செம்மால்!
5
வான் தோய் நல் இசை உலகமொடு உயிர்ப்ப,
துளங்கு குடி திருத்திய வலம் படு வென்றியும்;
மா இரும் புடையல், மாக் கழல், புனைந்து,
மன் எயில் எறிந்து மறவர்த் தரீஇ,
தொல் நிலைச் சிறப்பின் நின் நிழல் வாழ்நர்க்குக்
10
கோடு அற வைத்த கோடாக் கொள்கையும்;
நன்று பெரிது உடையையால் நீயே,
வெந்திறல் வேந்தே!  இவ் உலகத்தோர்க்கே.

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:வலம் படு வென்றி
உரை
 

38. கொடைச் சிறப்பு

உலகத்தோரே பலர்மன் செல்வர்;
எல்லாருள்ளும் நின் நல் இசை மிகுமே
வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல்!
எயில் முகம் சிதையத் தோட்டி ஏவலின்,
5
தோட்டி தந்த தொடி மருப்பு யானை,
செவ் உளைக் கலிமா, ஈகை வான் கழல்,
செயல் அமை கண்ணிச் சேரலர் வேந்தே!
பரிசிலர் வெறுக்கை! பாணர் நாள்அவை!
வாணுதல் கணவ! மள்ளர் ஏறே!  
10
மை அற விளங்கிய, வடு வாழ் மார்பின்,
வசை இல் செல்வ! வானவரம்ப!
'இனியவை பெறினே தனித்தனி நுகர்கேம்,
தருக' என விழையாத் தா இல் நெஞ்சத்து,
பகுத்தூண் தொகுத்த ஆண்மை,
15
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகன்மாறே.

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது

பெயர்:
பரிசிலர் வெறுக்கை  
உரை
 

42.கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும்

இரும் பனம்புடையல், ஈகை வான் கழல்,
மீன் தேர் கொட்பின் பனிக் கயம் மூழ்கிச்
சிரல் பெயர்ந்தன்ன நெடு வெள் ஊசி
நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின்,
அம்பு சேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது
5
தும்பை சூடாது மலைந்த மாட்சி,
அன்னோர் பெரும! நன்னுதல் கணவ!
அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ!
மைந்துடை நல் அமர்க் கடந்து, வலம் தரீஇ;
இஞ்சி வீ விராய பைந் தார் பூட்டி,  
10
சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்குஇருக்கை,
தீம் சேறு விளைந்த மணி நிற மட்டம்
ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து;
கோடியர் பெருங் கிளை வாழ, ஆடு இயல்
உளை அவிர் கலிமாப் பொழிந்தவை எண்ணின் 
15
மன்பதை மருள, அரசு படக் கடந்து,
முந்து வினை எதிர் வரப் பெறுதல் காணியர்,
ஒளிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து
மான மைந்தரொடு மன்னர் ஏத்த, நின்
தேரொடு சுற்றம் உலகு உடன் மூய,
20
மா இருந் தெண் கடல் மலி திரைப் பௌவத்து,
வெண் தலைக் குரூஉப் பிசிர் உடைய,
தண் பல வரூஉம் புணரியின் பலவே.

துறை:
செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:தசும்பு துளங்கு இருக்கை
உரை
 

44.மன்னனை 'நெடுங் காலம் வாழ்க' என
    வாழ்த்துதல்

நிலம் புடைப்பன்ன ஆர்ப்பொடு, விசும்பு துடையூ,
வான் தோய் வெல் கொடி தேர் மிசை நுடங்க,
பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்ற
அரிய என்னாது ஓம்பாது வீசி,
கலம் செலச் சுரத்தல் அல்லது, கனவினும்,  
5
'களைக' என அறியாக் கசடு இல் நெஞ்சத்து,
ஆடு நடை அண்ணல்! நின் பாடு மகள் காணியர்
காணிலியரோ  நிற் புகழ்ந்த யாக்கை
முழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடை:
நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை  
10
சேணன்ஆயினும், 'கேள்' என மொழிந்து,
புலம் பெயர்ந்து ஒளித்த களையாப் பூசற்கு,
அரண்கள் தாவுறீஇ, அணங்கு நிகழ்ந்தன்ன
மோகூர் மன்னன் முரசம் கொண்டு,
நெடுமொழி பணித்து, அவன் வேம்பு முதல் தடிந்து,
15
முரசு செய முரச்சி, களிறு பல பூட்டி,
ஒழுகை உய்த்தோய்! கொழு இல் பைந் துணி
வைத்தலை மறந்த துய்த் தலைக் கூகை
கவலை கவற்றும் குரால்அம் பறந்தலை,
முரசுடைத் தாயத்து அரசு பல ஓட்டி,
20
துளங்கு நீர் வியலகம் ஆண்டு, இனிது கழிந்த
மன்னர் மறைத்த தாழி,
வன்னி மன்றத்து விளங்கிய காடே.

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:நோய் தபு நோன் தொடை
உரை
 

45.வென்றிச் சிறப்பு

பொலம் பூந் தும்பை, பொறி கிளர் தூணி,
புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின்,
ஒசிவுடை வில்லின், ஒசியா நெஞ்சின்,
களிறு எறிந்து முரிந்த கதுவாய் எஃகின்,
விழுமியோர் துவன்றிய அகல் கண் நாட்பின்,
5
எழுமுடி மார்பின் எய்திய சேரல்!
குண்டு கண் அகழிய மதில் பல கடந்து,
பண்டும் பண்டும் தாம் உள் அழித்து உண்ட
நாடு கெழு தாயத்து நனந் தலை அருப்பத்துக்
கதவம் காக்கும் கணை எழு அன்ன,
10
நிலம் பெறு திணி தோள் உயர ஓச்சி,
பிணம் பிறங்கு அழுவத்து, துணங்கை ஆடி,
சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில்
ஓடாப் பீடர் உள் வழி இறுத்து,
முள் இடுபு அறியா ஏணி, தெவ்வர்
15
சிலை விசை அடக்கிய மூரி வெண் தோல்,
அனைய பண்பின் தானை மன்னர்
இனி யார் உளரோ, முன்னும் இல்லை
மழை கொளக் குறையாது, புனல் புக நிறையாது,
விலங்கு வளி கடவும் துளங்கு இருங் கமஞ் சூல்,
20
வயங்கு மணி இமைப்பின் வேல் இடுபு,
முழங்கு திரைப் பனிக் கடல் மறுத்திசினோரே?

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது

பெயர்:ஊன் துவை அடிசில்  
உரை
 

46.கொடைச் சிறப்பு

இழையர், குழையர், நறுந் தண் மாலையர்,
சுடர் நிமிர் அவிர் தொடி செறித்த முன்கை,
திறல் விடு திருமணி இலங்கு மார்பின்
வண்டு படு கூந்தல் முடி புனை மகளிர்
தொடை படு பேரியாழ் பாலை பண்ணி,  
5
பணியா மரபின் உழிஞை பாட,
இனிது புறந்தந்து, அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின்
சுரம் பல கடவும் கரை வாய்ப் பருதி
ஊர் பாட்டு எண் இல் பைந் தலை துமிய,
பல் செருக் கடந்த கொல் களிற்று யானை,
10
கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டு
உடை திரைப் பரப்பின் படு கடல் ஓட்டிய
வெல் புகழ்க் குட்டுவன் கண்டோர்
செல்குவம் என்னார், பாடுபு பெயர்ந்தே.

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது

பெயர்:கரை வாய்ப் பருதி 
உரை
 

47.கொடையினையும் அக் கொடைக்கு வருவாயாகிய
    பகைவரைக் கோறலையும் உடன் கூறுதல்

அட்டு ஆனானே குட்டுவன்; அடுதொறும்,
பெற்று ஆனாரே, பரிசிலர் களிறே;
வரை மிசை இழிதரும் அருவியின், மாடத்து
வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில்,
சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின்,  
5
பாண்டில் விளக்குப் பரூஉச் சுடர் அழல,
நல் நுதல் விறலியர் ஆடும்
தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே.

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது

பெயர்:நல் நுதல் விறலியர் 
உரை
 

53.அடைந்தவர்க்கு அருளலொடு படுத்து, மன்னவன்
    வென்றிச் சிறப்புக் கூறுதல்

வென்று கலம் தரீஇயர் வேண்டு புலத்து இறுத்து, அவர்
வாடா யாணர் நாடு திறை கொடுப்ப,
'நல்கினை ஆகுமதி, எம்' என்று; அருளி,
கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின்
தொல் புகழ் மூதூர்ச் செல்குவை ஆயின்,   
5
செம்பொறிச் சிலம்பொடு அணித் தழை தூங்கும்
எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்,
கோள் வல் முதலைய குண்டு கண் அகழி,
வான் உற ஓங்கிய வளைந்து செய் புரிசை,
ஒன்னாத் தெவ்வர் முனை கெட விலங்கி,   
10
நின்னின் தந்த மன் எயில் அல்லது,
முன்னும் பின்னும் நின் முன்னோர் ஓம்பிய
எயில் முகப்படுத்தல் யாவது? வளையினும்,
பிறிது ஆறு சென்மதி, சினம் கெழு குருசில்!-
எழூஉப் புறந்தரீஇ, பொன் பிணிப் பலகைக்  
15
குழூஉ நிலைப் புதவின் கதவு மெய் காணின்,
தேம் பாய் கடாத்தொடு காழ் கை நீவி,
வேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல்
ந்து கை சுருட்டி, தோட்டி நீவி,
மேம்படு வெல் கொடி நுடங்க,   
20
தாங்கல் ஆகா, ஆங்கு நின் களிறே.

துறை: செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:குண்டு கண் அகழி  
உரை
 

55.மன்னவன் உலகு புரத்தலும் தன் குறையும் கூறி,
   வாழ்த்துதல்

ஆன்றோள் கணவ! சான்றோர் புரவல!
நின் நயந்து வந்தனன், அடு போர்க் கொற்றவ!
இன் இசைப் புணரி இரங்கும் பௌவத்து,
நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர்,
கமழும் தாழைக் கானல்அம் பெருந் துறை,
5
தண் கடல் படப்பை நல் நாட்டுப் பொருந!
செவ் ஊன் தோன்றா, வெண் துவை முதிரை,
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை!
குடவர் கோவே! கொடித் தேர் அண்ணல்!
வாரார் ஆயினும் இரவலர், வேண்டி,
10
தேரின் தந்து, அவர்க்கு ஆர் பதன் நல்கும்
நசை சால் வாய்மொழி இசை சால் தோன்றல்!-
வேண்டுவ அளவையுள் யாண்டு பல கழிய,
பெய்து புறந்தந்து, பொங்கல் ஆடி,
விண்டுச் சேர்ந்த வெண் மழை போலச்
15
சென்றாலியரோ பெரும அல்கலும்
நனந் தலை வேந்தர் தார் அழிந்து அலற,
நீடு வரை அடுக்கத்த நாடு கைக்கொண்டு,
பொருது சினம் தணிந்த செருப் புகல் ஆண்மை,
தாங்குநர்த் தகைத்த ஒள் வாள்,   
20
ஓங்கல் உள்ளத்துக் குருசில்! நின் நாளே.

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:துஞ்சும் பந்தர்  
உரை
 

58.மன்னவன் நாட்டுச் செல்வமும் அதற்கேற்ற அவனது
   கொடையும் கூறுதல்

ஆடுக, விறலியர்! பாடுக, பரிசிலர்!-
வெண் தோட்டு அசைத்த ஒண் பூங் குவளையர்,
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர்,
செல் உறழ் மறவர் தம் கொல்படைத் தரீஇயர்,
'இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின், நாளை  
5
மண் புனை இஞ்சி மதில் கடந்தல்லது
உண்குவம்அல்லேம், புகா' எனக் கூறி,
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்;
பொய் படுபு அறியா வயங்கு செந் நாவின்,
எயில் எறி வல் வில், ஏ விளங்கு தடக் கை,
10
ந்து எழில் ஆகத்துச் சான்றோர் மெய்ம்மறை;
வானவரம்பன் என்ப- கானத்துக்
கறங்கு இசைச் சிதடி பொரி அரைப் பொருந்திய
சிறியிலை வேலம் பெரிய தோன்றும்
புன்புலம் வித்தும் வன் கை வினைஞர்  
15
சீருடைப் பல் பகடு ஒலிப்பப் பூட்டி,
நாஞ்சில் ஆடிய கொழு வழி மருங்கின்
அலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம்,
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே.

துறை:
செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:ஏ விளங்கு தடக்கை  
உரை
 

59.வென்றிச் சிறப்பு

பகல் நீடு ஆகாது, இரவுப்பொழுது பெருகி,
மாசி நின்ற மா கூர் திங்கள்,
பனிச் சுரம் படரும் பாண்மகன் உவப்ப,
புல் இருள் விடிய, புலம்பு சேண் அகல,
பாய் இருள் நீங்க, பல் கதிர் பரப்பி,
5
ஞாயிறு குணமுதல் தோன்றியாஅங்கு,
இரவல் மாக்கள் சிறுகுடி பெருக,
உலகம் தாங்கிய மேம்படு கற்பின்
வில்லோர் மெய்ம்மறை! வீற்று இருங் கொற்றத்துச்
செல்வர் செல்வ! சேர்ந்தோர்க்கு அரணம்!-
10
அறியாது எதிர்ந்து, துப்பில் குறையுற்று,
பணிந்து திறை தருப, நின் பகைவர், ஆயின்;
சினம் செலத் தணியுமோ? வாழ்க, நின் கண்ணி!-
பல் வேறு வகைய நனந் தலை ஈண்டிய
மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும்
15
ஆறு முட்டுறாஅது, அறம் புரிந்து ஒழுகும்
நாடல் சான்ற துப்பின் பணைத் தோள்,
பாடு சால் நன் கலம் தரூஉம்
நாடு புறந்தருதல் நினக்குமார் கடனே.

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது

பெயர்:மா கூர் திங்கள்
உரை
 

62.வென்றிச் சிறப்பு

இழை அணிந்து எழுதரும் பல் களிற்றுத் தொழுதியொடு,
மழை என மருளும் மா இரும் பல் தோல்,
எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவியொடு
மைந்துடை ஆர் எயில் புடை பட வளைஇ,
வந்து, புறத்து இறுக்கும் பசும் பிசிர் ஒள் அழல்
5
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு,
ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடுந் திறல்,
துப்புத் துறை போகிய கொற்ற வேந்தே!
புனல் பொரு கிடங்கின், வரைபோல் இஞ்சி,
10
அணங்குடைத் தடக் கையர் தோட்டி செப்பி,
பணிந்து திறை தருப, நின் பகைவர், ஆயின்,
புல்லுடை வியன் புலம் பல் ஆ பரப்பி,
வளனுடைச் செறுவின் விளைந்தவை உதிர்ந்த
களன் அறு குப்பை காஞ்சிச் சேர்த்தி,
15
அரியல் ஆர்கை வன் கை வினைநர்,
அருவி ஆம்பல் மலைந்த சென்னியர்,
ஆடு சிறை வரி வண்டு ஓப்பும்
பாடல் சான்ற, அவர் அகன் தலை நாடே.

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:வரைபோல் இஞ்சி   
உரை
 

63.மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு கூறி
   வாழ்த்துதல்

பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே;
பணியா உள்ளமொடு அணி வரக் கெழீஇ,
நட்டோர்க்கு அல்லது கண் அஞ்சலையே,
வணங்கு சிலை பொருத நின் மணம் கமழ் அகலம்
மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலையே;
5
நிலம் திறம் பெயரும் காலைஆயினும்,
கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே;
சிறியிலை உழிஞைத் தெரியல் சூடி,
கொண்டி மிகைபடத் தண் தமிழ் செறித்து,
குன்று நிலை தளர்க்கும் உருமின் சீறி,
10
ஒரு முற்று இருவர் ஓட்டிய ஒள் வாள்
செரு மிகு தானை வெல் போரோயே;
ஆடு பெற்று அழிந்த மள்ளர் மாறி,
'நீ கண்டனையேம்' என்றனர்: நீயும்
நும் நுகம் கொண்டு இனும் வென்றோய்: அதனால்,
15
செல்வக் கோவே! சேரலர் மருக!
கால் திரை எடுத்த முழங்கு குரல் வேலி
நனந் தலை உலகம் செய்த நன்று உண்டு எனின்,
அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல்
ஆயிர வெள்ள ஊழி  
20
வாழி, ஆத! வாழிய, பலவே!

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது

பெயர்:அருவி ஆம்பல்  
உரை
 

66.வென்றிச் சிறப்புடன் படுத்து, கொடைச் சிறப்புக்    கூறுதல்

வாங்கு இரு மருப்பின் தீம் தொடை பழுனிய
இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணி,
படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல!
'இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து, ஒன்னார்
வேலுடைக் குழூஉச் சமம் ததைய நூறி,  
5
கொன்று புறம் பெற்ற பிணம் பயில் அழுவத்து,
தொன்று திறை தந்த களிற்றொடு, நெல்லின்
அம்பண அளவை விரிந்து உறை போகிய
ஆர் பதம் நல்கும்' என்ப கறுத்தோர்
உறு முரண் தாங்கிய தார் அருந் தகைப்பின்,
10
நாள் மழைக் குழூஉச் சிமை கடுக்கும் தோன்றல்
தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின்,
தார் புரிந்தன்ன வாளுடை விழவின்,
போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்த
கடவுள் வாகைத் துய் வீ ஏய்ப்ப,
15
பூத்த முல்லைப் புதல் சூழ் பறவை
கடத்திடைப் பிடவின் தொடைக் குலைச் சேக்கும்,
வான் பளிங்கு விரைஇய, செம் பரல் முரம்பின்,
இலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம்
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே.
20

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:புதல் சூழ் பறவை 
உரை
 

68. காம வேட்கையின் ஓடாத மன்னவன்
   வென்றி வேட்கைச் சிறப்பு


கால் கடிப்பு ஆகக் கடல் ஒலித்தாங்கு,
வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண்,
கடுஞ் சிலை கடவும் தழங்கு குரல் முரசம்
அகல் இரு விசும்பின் ஆகத்து அதிர,
வெவ் வரி நிலைஇய எயில் எறிந்து அல்லது  
5
உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய,
நெஞ்சு புகல் ஊக்கத்தர், மெய் தயங்கு உயக்கத்து
இன்னார் உறையுள் தாம் பெறின்அல்லது,
வேந்து ஊர் யானை வெண் கோடு கொண்டு,
கள் கொடி நுடங்கும் ஆவணம் புக்கு உடன்,
10
அருங் கள் நொடைமை தீர்ந்த பின், மகிழ் சிறந்து,
நாமம் அறியா ஏம வாழ்க்கை
வட புல வாழ்நரின் பெரிது அமர்ந்து, அல்கலும்
இன் நகை மேய பல் உறை பெறுபகொல்
பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ,  
15
நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின்,
ஓவு உறழ் நெடுஞ் சுவர் நாள் பல எழுதிச்
செவ் விரல் சிவந்த அவ் வரிக் குடைச்சூல்,
அணங்கு எழில் அரிவையர்ப் பிணிக்கும்
மணம் கமழ் மார்ப! நின் தாள் நிழலோரே?
20

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்: ஏம வாழ்க்கை  
உரை
 

70.வென்றிச் சிறப்பொடு பிற சிறப்புக்களையும் கூறி,
    வாழ்த்துதல்

களிறு கடைஇய தாள்,
மா உடற்றிய வடிம்பு,
சமம் ததைந்த வேல்,
கல் அலைத்த தோள்,
வில் அலைத்த நல் வலத்து,  
5
வண்டு இசை கடாவாத் தண் பனம் போந்தைக்
குவி முகிழ் ஊசி வெண் தோடு கொண்டு,
தீம் சுனை நீர் மலர் மலைந்து, மதம் செருக்கி,
உடை நிலை நல் அமர் கடந்து, மறம் கெடுத்து,
கடுஞ் சின வேந்தர் செம்மல் தொலைத்த  
10
வலம் படு வான் கழல் வயவர் பெரும!
நகையினும் பொய்யா வாய்மை, பகைவர்
புறஞ்சொல் கேளாப் புரை தீர் ஒண்மை,
பெண்மை சான்று பெரு மடம் நிலைஇக்,
கற்பு இறை கொண்ட கமழும் சுடர் நுதல்  
15
புரையோள் கணவ! பூண் கிளர் மார்ப!
தொலையாக் கொள்கைச் சுற்றம் சுற்ற,
வேள்வியில் கடவுள் அருத்தினை; கேள்வி
உயர்நிலை உலகத்து ஐயர் இன்புறுத்தினை;
வணங்கிய சாயல், வணங்கா ஆண்மை,
20
இளந் துணைப் புதல்வரின் முதியர்ப் பேணி,
தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல்!
மாடோர் உறையும் உலகமும் கேட்ப
இழுமென இழிதரும் பறைக் குரல் அருவி
முழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும்
25
அயிரை நெடு வரை போல,
தொலையாதாக, நீ வாழும் நாளே!

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்:பறைக் குரல் அருவி  
உரை
 

71.வென்றிச் சிறப்புக் கூறி, மன்னனுக்குப் பகைவர்மேல்
   அருள் பிறப்பித்தல்

அறாஅ யாணர் அகன் கண் செறுவின்
அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து,
செறு வினை மகளிர் மலிந்த வெக்கை,
பரூஉப் பகடு உதிர்த்த மென் செந்நெல்லின்
அம்பண அளவை உறை குவித்தாங்கு,
5
கடுந் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும்
செழுங் கூடு கிளைத்த இளந்துணை மகாஅரின்,
அலந்தனர், பெரும! நின் உடற்றியோரே:
ஊர் எரி கவர, உருத்து எழுந்து உரைஇ,
போர் சுடு, கமழ் புகை மாதிரம் மறைப்ப,   
10
மதில்வாய்த் தோன்றல் ஈயாது தம் பழி ஊக்குநர்
குண்டு கண் அகழிய குறுந் தாள் ஞாயில்
ஆர் எயில் தோட்டி வௌவினை; ஏறொடு
கன்றுடை ஆயம் தரீஇப் புகல் சிறந்து,
புலவு வில் இளையர் அங்கை விடுப்ப,
15
மத்துக் கயிறு ஆடா வைகல் பொழுது நினையூஉ,
ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க,
பதி பாழாக வேறு புலம் படர்ந்து,
விருந்தின் வாழ்க்கையொடு பெருந் திரு அற்றென,
அருஞ் சமத்து அரு நிலை தாங்கிய புகர் நுதல்
20
பெருங் களிற்று யானையொடு அருங் கலம் தராஅர்,
மெய் பனி கூரா, அணங்கு எனப் பராவலின்,
பலி கொண்டு பெயரும் பாசம் போல,
திறை கொண்டு பெயர்தி; வாழ்க, நின் ஊழி!
உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி,
25
அறிந்தனை அருளாய்ஆயின்,
யார் இவண், நெடுந் தகை! வாழுமோரே?

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:குறுந் தாள் ஞாயில்
உரை
 

72.மன்னவனது சூழ்ச்சியுடைமையும் வென்றிச் சிறப்பும்

இகல் பெருமையின் படை கோள் அஞ்சார்,
சூழாது துணிதல் அல்லது, வறிது உடன்
காவல் எதிரார், கறுத்தோர், நாடு; நின்
முன் திணை முதல்வர்க்கு ஓம்பினர் உறைந்து,
மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்
5
நன்று அறி உள்ளத்துச் சான்றோர் அன்ன, நின்
பண்பு நன்கு அறியார், மடம் பெருமையின்;
துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை,
நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து ஈண்டி,
உரவுத் திரை கடுகிய உருத்து எழு வெள்ளம்  
10
வரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்து,
ஞாயிறு பட்ட அகன்று வரு கூட்டத்து
அம் சாறு புரையும் நின் தொழில் ஒழித்து,
பொங்கு பிசிர் நுடக்கிய செஞ் சுடர் நிகழ்வின்
மடங்கல் தீயின் அனையை, 
15
சினம் கெழு குருசில்! நின் உடற்றிசினோர்க்கே.

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:உருத்து எழு வெள்ளம்
உரை
 

73.வென்றிச் சிறப்பு

உரவோர் எண்ணினும், மடவோர் எண்ணினும்,
பிறர்க்கு நீ வாயின் அல்லது, நினக்குப்
பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே!
....கூந்தல் ஒள் நுதல் பொலிந்த
நிறம் திகழ் பாசிழை உயர்திணை மகளிரும்  
5
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர்
.... .... .... .... ... ... ...
மருதம் சான்ற மலர்தலை விளை வயல்
செய்யுள் நாரை ஒய்யும் மகளிர்
இரவும் பகலும் பாசிழை களையார்,   
10
குறும் பல் யாணர்க் குரவை அயரும்
காவிரி மண்டிய சேய் விரி வனப்பின்
புகாஅர்ச் செல்வ! பூழியர் மெய்ம்மறை!
கழை விரிந்து எழுதரு மழை தவழ் நெடுங் கோட்டுக்
கொல்லிப் பொருந! கொடித் தேர்ப் பொறைய! 'நின்
15
வளனும் ஆண்மையும் கைவண்மையும்
மாந்தர் அளவு இறந்தன' எனப் பல் நாள்
யான் சென்று உரைப்பவும் தேறார்; 'பிறரும்
சான்றோர் உரைப்பத் தெளிகுவர்கொல்?' என,
ஆங்கும் மதி மருளக் காண்குவல்;
20
'யாங்கு உரைப்பேன்?' என வருந்துவல், யானே.

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:நிறம் திகழ் பாசிழை   
உரை
 

74.நல்லொழுக்கமும் அதற்கு ஏற்ற நல்லறிவுடைமையும்
   எடுத்துக் கூறுதல்

கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது,
வேள்வி வேட்டனை, உயர்ந்தோர் உவப்ப;
சாய் அறல் கடுக்கும் தாழ் இருங் கூந்தல்,
வேறு படு திருவின் நின் வழி வாழியர்,
கொடுமணம் பட்ட வினை மாண் அருங் கலம்,
5
பந்தர்ப் பயந்த பலர் புகழ் முத்தம்,
வரையகம் நண்ணி, குறும்பொறை நாடி,
தெரியுநர் கொண்ட சிரறுடைப் பைம் பொறி,
கவை மரம் கடுக்கும் கவலைய மருப்பின்,
புள்ளி இரலைத் தோல் ஊன் உதிர்த்துத்   
10
தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டில்
பருதி போகிய புடை கிளை கட்டி,
எஃகுடை இரும்பின் உள் அமைத்து, வல்லோன்
சூடு நிலை உற்றுச் சுடர் விடு தோற்றம்
விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்ப,
15
நலம் பெறு திரு மணி கூட்டும் நல் தோள்,
ஒடுங்கு ஈர் ஓதி, ஒண்ணுதல் கருவில்
எண் இயல் முற்றி, ஈர் அறிவு புரிந்து,
சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்
காவற்கு அமைந்த அரசு துறை போகிய
20
வீறு சால் புதல்வன் பெற்றனை, இவணர்க்கு
அருங் கடன் இறுத்த செருப் புகல் முன்ப!
அன்னவை மருண்டனென்அல்லேன்; நின் வயின்
முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை,
'வண்மையும், மாண்பும், வளனும், எச்சமும்,
25
தெய்வமும், யாவதும், தவம் உடையோர்க்கு' என,
வேறு படு நனந் தலைப் பெயரக்
கூறினை, பெரும! நின் படிமையானே.

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:நலம் பெறு திருமணி   
உரை
 

75.வென்றிச் சிறப்பு

இரும் புலி கொன்று, பெருங் களிறு அடூஉம்,
அரும் பொறி வய மான் அனையை  பல் வேல்,
பொலந் தார் யானை, இயல் தேர்ப் பொறைய!
வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப் பணிந்து,
நின் வழிப் படாஅர் ஆயின், நெல் மிக்கு,
5
அறை உறு கரும்பின் தீம் சேற்று யாணர்,
வருநர் வரையா வளம் வீங்கு இருக்கை,
வன் புலம் தழீஇ மென்பால் தோறும்
அரும் பறை வினைஞர் புல் இகல் படுத்து,
கள்ளுடை நியமத்து ஒள் விலை கொடுக்கும்   
10
வெள் வரகு உழுத கொள்ளுடைக் கரம்பைச்
செந்நெல் வல்சி அறியார், தம்தம்
பாடல் சான்ற வைப்பின்
நாடு உடன் ஆள்தல் யாவணது, அவர்க்கே?

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:தீம் சேற்று யாணர்   
உரை
 

76.வென்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும்

களிறுடைப் பெருஞ் சமம் ததைய, எஃகு உயர்த்து,
ஒளிறு வாள் மன்னர் துதை நிலை கொன்று,
முரசு கடிப்பு அடைய அருந் துறை போகி,
பெருங் கடல் நீந்திய மரம் வலியுறுக்கும்
பண்ணிய விலைஞர் போல, புண் ஒரீஇ,
5
பெருங் கைத் தொழுதியின் வன் துயர் கழிப்பி,
இரந்தோர் வாழ நல்கி, இரப்போர்க்கு
ஈதல் தண்டா மா சிதறு இருக்கை
கண்டனென் செல்கு வந்தனென்  கால்கொண்டு,
கருவி வானம் தண் தளி சொரிந்தென,
10
பல் விதை உழவின் சில் ஏராளர்
பனித் துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல்,
கழுவுறு கலிங்கம் கடுப்ப, சூடி,
இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம்
அகன் கண் வைப்பின் நாடு கிழவோயே!  
15

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம
தூக்கு:செந்தூக்கு

பெயர்: மா சிதறு இருக்கை  
உரை
 

79.மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு புகழ்ந்து,
   வாழ்த்துதல்

உயிர் போற்றலையே, செருவத்தானே;
கொடை போற்றலையே, இரவலர் நடுவண்;
பெரியோர்ப் பேணி, சிறியோரை அளித்தி;
நின்வயின் பிரிந்த நல் இசை கனவினும்
பிறர் நசை அறியா  வயங்கு செந் நாவின்,
5
படியோர்த் தேய்த்த ஆண்மை, தொடியோர்
தோளிடைக் குழைந்த கோதை மார்ப!
அனைய அளப்பு அருங்குரையை: அதனால்,
நின்னொடு வாரார் தம் நிலத்து ஒழிந்து,
கொல் களிற்று யானை எருத்தம் புல்லென,
10
வில் குலை அறுத்து, கோலின் வாரா
வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து, அவர்
அரசு உவா அழைப்பக் கோடு அறுத்து இயற்றிய
அணங்கு உடை மரபின் கட்டில்மேல் இருந்து,
தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து,
15
நிறம் படு குருதி புறம்படின் அல்லது,
மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின்
கடவுள் அயிரையின் நிலைஇ,
கேடு இலவாக, பெரும! நின் புகழே!

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:நிறம் படு குருதி 
உரை
 

85.முன்னோருடைய கொடைச் சிறப்பொடு படுத்து,
   வென்றிச் சிறப்புக் கூறுதல்

நல் மரம் துவன்றிய நாடு பல தரீஇ,
'பொன் அவிர் புனைசெயல் இலங்கும் பெரும் பூண்,
ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்'
இட்ட வெள் வேல்'முத்தைத் தம்' என,
முன் திணை முதல்வர் போல நின்று,   
5
தீம் சுனை நிலைஇய திரு மா மருங்கின்
கோடு பல விரிந்த நாடு காண் நெடு வரை,
சூடா நறவின் நாள் மகிழ் இருக்கை,
அரசவை பணிய, அறம் புரிந்து வயங்கிய
மறம் புரி கொள்கை, வயங்கு செந் நாவின்,   
10
உவலை கூராக் கவலை இல் நெஞ்சின்,
நனவில் பாடிய நல் இசைக்
கபிலன் பெற்ற ஊரினும் பலவே.

துறை:
செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:நாடு காண் நெடு வரை   
உரை
 

86.மன்னவனது வன்மை மென்மைச் சிறப்புக் கூறுதல்

'உறல் உறு குருதிச் செருக்களம் புலவக்
கொன்று, அமர்க் கடந்த வெந் திறல் தடக் கை
வென் வேல் பொறையன்' என்றலின், வெருவர,
வெப்புடை ஆடூஉச் செத்தனென், மன் யான்:
நல் இசை நிலைஇய, நனந் தலை உலகத்து,
5
இல்லோர் புன்கண் தீர நல்கும்
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்,
பாடுநர் புரவலன், ஆடு நடை அண்ணல்,
கழை நிலை பெறாஅக் குட்டத்துஆயினும்,
புனல் பாய் மகளிர் ஆட, ஒழிந்த
10
பொன் செய் பூங் குழை மீமிசைத் தோன்றும்
சாந்து வரு வானி நீரினும்,
தீம் தண் சாயலன் மன்ற, தானே.

துறை:
செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:வெந் திறல் தடக்கை
உரை
 

88.கொடைச் சிறப்பும் காம இன்பச் சிறப்பும் உடன்
   கூறி, வாழ்த்துதல்

வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது,
கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து,
தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து,
தம் பெயர் போகிய ஒன்னார் தேய,
துளங்கு இருங் குட்டம் தொலைய, வேல் இட்டு;
            5

அணங்குடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து;
பொரு முரண் எய்திய கழுவுள் புறம் பெற்று;
நாம மன்னர் துணிய நூறி,
கால் வல் புரவி அண்டர் ஓட்டி,
சுடர் வீ வாகை நன்னற் தேய்த்து,
                       10

குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோடு
உரு கெழு மரபின் அயிரை பரைஇ,
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய,
கொற்றம் எய்திய பெரியோர் மருக!
வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில்!
              15

விரவுப் பணை முழங்கும், நிரை தோல் வரைப்பின்,
உரவுக் களிற்று வெல் கொடி நுடங்கும் பாசறை,
ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை
நார் அரி நறவின் கொங்கர் கோவே!
உடலுநர்த் தபுத்த பொலந் தேர்க் குருசில்!
                20

வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந!
நீ நீடு வாழிய, பெரும! நின்வயின்
துவைத்த தும்பை நனவுற்று வினவும்
மாற்று அருந் தெய்வத்துக் கூட்டம் முன்னிய
புனல் மலி பேரியாறு இழிதந்தாங்கு,
                     25

வருநர் வரையாச் செழும் பல் தாரம்
கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப,
ஓவத்து அன்ன உரு கெழு நெடு நகர்,
பாவை அன்ன மகளிர் நாப்பண்,
புகன்ற மாண் பொறிப் பொலிந்த சாந்தமொடு
             30

தண் கமழ் கோதை சூடி, பூண் சுமந்து,
திருவில் குலைஇத் திருமணி புரையும்
உரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்து,
வேங்கை விரிந்து, விசும்புறு சேட்சிமை,
அருவி அரு வரை அன்ன மார்பின்
                    35

சேண் நாறு நல் இசைச் சேயிழை கணவ!
மாகம் சுடர மா விசும்பு உகக்கும்
ஞாயிறு போல விளங்குதி, பல் நாள்!
ஈங்குக் காண்கு வந்தனென், யானே
உறு கால் எடுத்த ஓங்கு வரல் புணரி                  
40

நுண் மணல் அடை கரை உடைதரும்
தண் கடல் படப்பை நாடு கிழவோயே!

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:கல் கால் கவணை
உரை